ஆப்நகரம்

Aadi Amavasai 2018: ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடல்!

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் நாடு முழுவதும் வந்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Samayam Tamil 11 Aug 2018, 11:41 am
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் நாடு முழுவதும் வந்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil aadi
ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடல்!


தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியமாக கருப்படுகிறது. குறிப்பாக அமாவாசை நாட்களில் திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அந்தவகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து வந்திருந்த லட்சகணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடுகளை நடத்தினர்.

ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடல்!


ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதசுவாமி திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்குதங்கக் கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் அருள்மிகு ராமர், பக்தர்களுக்குத் தீர்த்தவாரி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.முன்னதாக அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கு வீதி உலா நடந்தது.

ஆடி அமாவாசை தினமான இன்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், கோயிலில் தீர்த்தமாடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கோயிலின் 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அமாவாசை தினத்தை முன்னிட்டு கோயில் இன்று அதிகாலை 3 மணிக்குதிறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜைநடந்தது. மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடல்!


அமாவாசையை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் தாமிரபரணி ஆறு, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்