ஆப்நகரம்

ராமேஸ்வரம் கோவிலில் ஆடித்திருவிழா துவக்கம்!

இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் ஆடித்திருவிழா கோலகலமாக தொடங்கியது.

Samayam Tamil 4 Aug 2018, 7:00 pm
இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் ஆடித்திருவிழா கோலகலமாக தொடங்கியது.
Samayam Tamil rameshwaram aadi function


இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. அம்மன் சன்னதியில் உள்ள தங்கக்கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் வேதங்களை முழங்க துலாம் லக்ன நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

வரும் 11ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு தீர்த்த கடலில் ஸ்ரீராமர் கடலில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்வும், 12ம் தேதி ஆடி தேரோட்டமும், 15 ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக செய்து கொடுக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்