ஆப்நகரம்

ஆவணி கிருத்திகையில் முருகனுக்கு சிறப்பு பூஜை!

ஆவணி கிருத்திகையான இன்று முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

TOI Contributor 24 Aug 2016, 1:21 pm
ஆவணி கிருத்திகையான இன்று முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Samayam Tamil avani kiruthigai special pooja to murugan
ஆவணி கிருத்திகையில் முருகனுக்கு சிறப்பு பூஜை!


ஆவணி கிருத்திகை நாள் இன்று. எனவே முருகப் பெருமானுக்கு உகந்த அற்புதமான நாளில், காலையில் இருந்தே ஆலயங்களுக்கு முருகக் கடவுளுக்கு பாலபிஷேகம் முதலான அபிஷேகங்கள் நடைபெற்றன.

மேலும் ஸ்ரீசுப்ரமணியருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. அதையடுத்து, ராஜ அலங்காரத்தில், கம்பீரத்துடன் காட்சி அளித்தார் முருகப்பெருமான். மாதக் கிருத்திகையில் தொடர்ந்து விரதம் இருப்பவர்கள், இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானைத் தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்தார்கள்.

திருப்பரங்குன்றம் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள், கிருத்திகையை முன்னிட்டு வேலுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டார்கள். திருத்தணி, பழநி, திருச்செந்தூரில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெற்றன.

திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவையொட்டி, காலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உத்ஸவர், சர்வ அலங்காரத்தில் காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை வடபழநி கோயிலிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்