ஆப்நகரம்

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.28) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

TNN 28 Apr 2017, 12:51 pm
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.28) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
Samayam Tamil chithirai festival started with flag hoist in madurai meentchi amman temple
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்


சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் விருட்ஷப வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வரவுள்ளனர். இன்று முதல் தினசரி அம்மன், சுவாமி, பிரியாவிடை பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மே.5ஆம் தேதி இரவு 6.55 மணி முதல் 7.19 மணி வரை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 6ல் திக்கு விஜயம், மே.7ல் காலை 8.55 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வரும். மே 9ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவுபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக சிம்மம், யாளி, யானை உள்ளிட்ட வாகனங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை கண்டு மகிழ பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதாக கோயில் தெரிவித்துள்ளது.

Chithirai festival started with flag hoist in Madurai Meentchi Amman Temple.

அடுத்த செய்தி

டிரெண்டிங்