ஆப்நகரம்

ஆடியில்... விளக்கேற்றினால் தீராத நோயும் நீங்கும்!

ஆடி மாதம் என்பது கலைத்துப் போடும் காற்றும் நனைக்கிற அளவுக்கு பெய்யும் மழையும் கைகோர்க்கும் காலம். இதுதான் மழைக்காலத்தின் துவக்கம். இப்படியான பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

TOI Contributor 18 Jul 2016, 5:44 pm
ஆடி மாதம் என்பது கலைத்துப் போடும் காற்றும் நனைக்கிற அளவுக்கு பெய்யும் மழையும் கைகோர்க்கும் காலம். இதுதான் மழைக்காலத்தின் துவக்கம். இப்படியான பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.
Samayam Tamil diseases will be cured by lighting lamp on aadi month
ஆடியில்... விளக்கேற்றினால் தீராத நோயும் நீங்கும்!

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவது உறுதி!

மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபிட்சம் குடிகொள்ளும், தீராத நோயும் தீரும் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்! .

அடுத்த செய்தி

டிரெண்டிங்