ஆப்நகரம்

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிட சிறந்த வாய்ப்பு!

தைப்பூசம் என்றதும் பழநியும், பாதயாத்திரையும் தான் நினைவுக்கு வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக செல்வர்.

Samayam Tamil 23 Jan 2018, 4:29 pm
தைப்பூசம் என்றதும் பழநியும், பாதயாத்திரையும் தான் நினைவுக்கு வரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக செல்வர்.
Samayam Tamil free food for palani pada yatra devotees
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிட சிறந்த வாய்ப்பு!

இவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர், பக்தர்கள் அன்னதானம் வழங்குவர். வரும் தைப்பூசத்தையொட்டி, பழநிக்கு பாதயாத்திரை வரும் அடியார்களுக்கு, அன்னம் பாலிக்கும் விழா, வரும் 28 மற்றும் 29 தேதிகளில் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற உள்ளது.

இதற்காக, ஒட்டன்சத்திரம், குழந்தை வேலப்பர் சன்னதி அருகே, எல்.என். திருமண மண்டபத்தில், அன்னதான குடிலை, சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு அமைத்துள்ளது. இப்பணியில் பங்கேற்று சேவையாற்ற விரும்புகிறவர்கள், உதவிட விரும்புகிறவர்கள் 9944309719, 9842198889 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சென்னை தினமலர் மூத்த உதவி ஆசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் இந்த திருப்பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்