ஆப்நகரம்

திருமண வரம் அருளும் கருடாழ்வார்!

தஞ்சாவூர் திருநறையூர் நம்பி ஆலயத்தில் உள்ள கருடாழ்வாரை வளர்பிறை பஞ்சமி திதியில் வணங்கி வந்தால் மகப்பேறு மற்றும் திருமணம் பாக்யம் கிட்டும்.

TNN 21 Apr 2017, 5:51 pm
தஞ்சாவூர்: தஞ்சாவூர் திருநறையூர் நம்பி ஆலயத்தில் உள்ள கருடாழ்வாரை வளர்பிறை பஞ்சமி திதியில் வணங்கி வந்தால் மகப்பேறு மற்றும் திருமணம் பாக்யம் கிட்டும்.
Samayam Tamil garudalwars blessings will clear all the barriers in marriages
திருமண வரம் அருளும் கருடாழ்வார்!


தஞ்சாவூர் நாச்சியார் கோவில் அருகே உள்ள திருநறையூர் நம்பி ஆலயம், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தக் கோயிலில் உள்ள பெருமாள், ‘திரு நறையூர் நம்பி’ என்ற பெயரிலும், தாயார் வஞ்சுளவல்லி என்ற பெயரிலும் அருள்பாலித்து வருகின்றனர்.

பெருமாள் கருவறைக்கு முன்பாக வலது புறம் தனி சன்னிதியில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். உற்சவ காலத்தில் இங்குள்ள கல் கருடரே பெருமாளுக்கு வாகனமாக செல்வார் என்பது சிறப்பம்சம் வாய்ந்ததாகும். சன்னிதிகளில் இருக்கும் கருடாழ்வார் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் சிறப்பம்சம் வேறு எந்த கோயில்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்திபெற்றது. கருடாழ்வாரே, ஆண்டாளின் தகப்பனாரான 'பெரியாழ்வார்' அவதாரம் எடுத்து வந்ததாக புராண கதைகளில் கூறப்படுகிறது. இங்குள்ள கருடாழ்வாருக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சாத்தி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். பட்டு வஸ்திரம் சாத்தி வழிபட்டால், எண்ணங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

குறிப்பாக ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வாரை வணங்கினால், மகப்பேறு பாக்யம் உண்டாகும். தடைப்பட்டு போன திருமணம் சுபகாரியம் நிகழும். விஷ ஜந்துக்களின் பயம் போகும். பொதுவாக எல்லா கருடனின் உடலிலும் எட்டு நாகங்களே ஆபரணங்களாக இருக்கும். ஆனால் இங்குள்ள கருடாழ்வாருக்கு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்