ஆப்நகரம்

குரு பகவான் தலங்களில் அபிஷேக, ஆராதனை!

வியாழக்கிழமையான இன்று குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலங்களில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவை இனிதே நடைபெற்றன.

TOI Contributor 31 Mar 2016, 7:02 pm
வியாழக்கிழமையான இன்று குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலங்களில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவை இனிதே நடைபெற்றன.
Samayam Tamil guru bhagavan special poojas
குரு பகவான் தலங்களில் அபிஷேக, ஆராதனை!

வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். இந்த நாளில், சிவபெருமானே குருவாக இருந்து, ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சி தந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளியதாகச் சொல்கிறது புராணம். எனவே ஞானகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு இந்த நாளில், கொண்டக்கடலை மாலை சார்த்தி வழிபாடு செய்வது கல்வியும் ஞானம் தரும் என்பது ஐதீகம்.
அதேபோல், நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் குடிகொண்டிருக்கும் பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் தனிச்சந்நிதியில் அமைந்திருக்கும் தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருத்தலம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், சென்னை பாடி திருவலிதாயம், மதுரை குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு பகவான் திருத்தலம், திருச்சி உத்தமர் கோவிலில் உள்ள, மும்மூர்த்திகள் அருளும் தலத்தில் உள்ள அஷ்ட குருக்கள், துடையூர் ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் கோயிலில் உள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி முதலானோருக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடந்தேறின.
தேர்வுக்காலம் என்பதால், ஏராளமான மாணவர்கள் காலையிலும் மாலையிலும் ஆலயங்களுக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்