ஆப்நகரம்

ராம நாமம் சொன்னால் என்ன பலன் கிடைக்கும்? நாரதருக்கு எளிமையாக புரிய வைத்த மகாவிஷ்ணு

ராம நாமம் சொன்னால், அனுமனை வழிபட்டால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் துன்பங்கள் விலகும் என பலரும் பல காலமாக கூறி வருகிறார்கள். அதை நாமம் பின்பற்றி வருகிறோம். ஆனால் ராம நாமத்தை சொல்வதாலும், கேட்பதாலும் அப்படி என்ன பலன் கிடைக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதே சந்தேகம் தேவ ரிஷியான நாரதருக்கும் வந்தது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 27 Dec 2022, 10:31 am
வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவிடமே கேட்டார். "ராம நாமத்திற்கு அப்படி என்ன மகிமை உள்ளது? அதை சொல்வதாலும், கேட்பதாலும் நமக்கு அப்படி என்ன பலன் கிடைக்கிறது? எனக்கு விளக்கமாக சொல்லி, என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சுவாமி" என பரந்தாமனிடம் கேட்டார். சற்று யோசித்த மகா விஷ்ணு, "அதோ பூமியில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறதா? அதன் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றார்.
Samayam Tamil amazing story about the glory of rama nama
ராம நாமம் சொன்னால் என்ன பலன் கிடைக்கும்? நாரதருக்கு எளிமையாக புரிய வைத்த மகாவிஷ்ணு


ராம நாமத்தின் மகிமை

ராம நாமம் சொன்னால், அனுமனை வழிபட்டால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் துன்பங்கள் விலகும் என பலரும் பல காலமாக கூறி வருகிறார்கள். அதை நாமம் பின்பற்றி வருகிறோம். ஆனால் ராம நாமத்தை சொல்வதாலும், கேட்பதாலும் அப்படி என்ன பலன் கிடைக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதே சந்தேகம் தேவ ரிஷியான நாரதருக்கும் வந்தது. பலரிடமும் இதற்கான விளக்கத்தை கேட்டார். ஆனால் யார் கொடுத்த பதிலும் அவருக்கும் திருப்தி அளிக்கவில்லை.

நாரதருக்கு வந்த சந்தேகம்

இறுதியாக வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவிடமே கேட்டார். "ராம நாமத்திற்கு அப்படி என்ன மகிமை உள்ளது? அதை சொல்வதாலும், கேட்பதாலும் நமக்கு அப்படி என்ன பலன் கிடைக்கிறது? எனக்கு விளக்கமாக சொல்லி, என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சுவாமி" என பரந்தாமனிடம் கேட்டார். சற்று யோசித்த மகா விஷ்ணு, "அதோ பூமியில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறதா? அதன் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றார்.

சபரிமலை கோவில் வருமானம் ரூ. 222. 98 கோடியை கடந்தது

காதில் சொன்ன ராம நாமம்

மகா விஷ்ணு செய்ய சொன்ன காரியம்

மகாவிஷ்ணு காரணம் இல்லாமலா சொல்வார் என நினைத்துக் கொண்டு, நாரதருக்கும் சென்று அந்த புழுவின் காதில் ராம நாமத்தை சொன்னார். உடனே அந்த புழுவின் உயிர் போய் விட்டது. பதறிப் போன நாரதர், மீண்டும் மகாவிஷ்ணுவிடம் வந்து நடந்த விபத்தை சொன்னார். அப்போதும் சாதாரணமாக அப்படியா என கேட்டு விட்டு, "சரி போகட்டும் அதோ பறந்து கொண்டிருக்கிறதே அந்த பட்டாம் பூச்சியின் காதில் போல் ராம நாமத்தை சொல்" என்றார் பெருமாள்.

இறந்து போன உயிர்கள்

நாரதரும் அப்படியே செய்ய அந்த பட்டாம் பூச்சியும் இறந்து விட்டது. மீண்டும் வைகுண்டம் வந்த நாரதரிடம், அதோ தெரிகிறதே அந்த குடிசை வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் ஒரு பசு, கன்றை ஈன்றெடுக்க போகிறது. அதன் காதில் சென்று ராம நாமத்தை சொல் என்றார். இந்த முறை சற்று தயக்கத்துடனேயே சென்ற நாரதர், பிறந்த கன்றுக்குட்டியின் காதிலும் ராம நாமத்தை சொல்ல, அதுவும் இறந்து விட்டது. பதறி அடித்து ஓடி வந்து நாரதர், "என்ன சுவாமி இப்படி ஆகி விட்டது? ராம நாமத்தின் மகிமை பற்றி கேட்க வந்தால், ராம நாமத்தை ஒவ்வொரு உயிர்களின் காதிலும் சொல்ல சொன்னீர்கள். ஆனால் நான் சொன்னதும் அவைகள் இறந்து விடுகின்றன. இதுவா ராம நாமத்தின் மகிமை?" என்றார்.

புனிதம் நிறைந்த 2023 ம் ஆண்டு : என்னென்ன சிறப்புக்கள் உள்ளது ?

நாரதருக்கு தைரியம் சொன்ன மகாவிஷ்ணு

நடுங்கிப் போன நாரதர்

அதற்கு பதிலளித்த மகாவிஷ்ணு, "குழப்பம் வேண்டாம் நாரதா. இந்த நாட்டின் மன்னருக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது. இந்த முறை அந்த குழந்தையின் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றார். நடுங்கிப் போனார் நாரதர். "நாட்டின் மன்னனுக்கு பிறக்கும் குழந்தையின் காதில் சொல்ல வேண்டுமா? ஏற்கனவே நடந்தது போல் அந்த குழந்தைக்கும் ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது? யாருடைய கண்ணிற்கு தெரிய மாட்டேன் என்பதால் தப்பித்தேன். ஒருவேளை மன்னர் என்ன கண்டுபிடித்து விட்டால் எனது நிலை என்ன ஆகும்?" என புலம்பினார். அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் மகா விஷ்ணு.

நாரதரின் சந்தேகத்தை போக்கிய குழந்தை

குழந்தையின் காதில் ராம நாமம்

நாரதரும் தயங்கி தயங்கி அரண்மனைக்கு வந்தார். அப்போது மன்னனுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையில் காதில் சென்று ராம நாமத்தை சொல்லி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட வேண்டும் என திரும்பிய நாரதரிடம் பிறந்த குழந்தை பேசியது. "என்ன நாரதரே நலமா?" என விசாரித்தது. நாரதருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "பிறந்த குழந்தை பேசுகிறதா? எப்படி நடக்கும் இது? அதுவும் யாருடைய கண்ணிற்கு தெரியாத என்னை அடையாளம் கண்டு, நாரதா என்கிறது. இந்த குழந்தைக்கு எப்படி நான் தான் நாரதன் என்று தெரியும்?" என மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் நாரதர்.

நாரதரை ஆச்சரியப்பட வைத்த குழந்தை

நாரதரின் கேள்விகளை உணர்ந்த குழந்தை பதிலளித்தது. " என்ன நாரதரே என்னை தெரியவில்லையா? என்னுடைய இந்த நிலைக்கு நீங்கள் தானே காரணம்" என்றது. தொடர்ந்து, "மண்ணில் புழுவாக நெளிந்து கொண்டிருந்த எனது காதில் ராம நாமத்தை சொல்லி என்னை புனிதம் அடைய வைத்தீர்கள். அதன் பயனாக அடுத்த பிறவியில் பட்டாம்பூச்சியாக பிறந்தேன். அப்போதும் விடாமல் என் காதில் ராம நாமத்தை சொன்னீர்கள். பிறகு கன்றுக்குட்டியாக பிறந்த போதும் என் காதில் ராம நாமத்தை சொல்லி, எனது நிலையை மேலும் உயர்த்தினீர்கள்.

ஐயப்பனின் திருவாபரண பெட்டிக்குள் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா?

கேட்டதற்கே இத்தனை பலனா?

ராம நாமத்திற்கு இத்தனை மகத்துவமா?

நீங்கள் என் காதில் சொன்ன ராம நாமத்தின் பலனாக தற்போது இந்த நாட்டின் மன்னனுக்கு குழந்தையாக, கிடைப்பதற்கு அரிய மனித பிறவியை பெற்றுள்ளேன். நீங்கள் சொன்ன ராம நாமத்தை நான் ஒரு முறை என் காதில் கேட்டதற்கே இத்தனை உயர்வு எனக்கு கிடைத்திருக்கிறது" என்றது. குழந்தையின் இந்த பேச்சை கேட்டு நேராக வைகுண்டம் வந்து மகாவிஷ்ணுவின் திருவடிகளை சரணடைந்தார் நாரதர். "ராம நாமத்தின் மகிமையை இப்போது புரிந்து கொண்டேன். ஒரு முறை காதில் கேட்ட புழுவிற்கே ராஜ பதவி கிடைத்திருக்கிறது என்றால், அதன் பெருமையை உணர்ந்து, பக்தியுடன் சொல்லும் மற்றவர்களுக்கு எத்தனை பெரிய உயர்வான இடம் கிடைக்கும் என்பதை சொல்ல வார்த்தைகளே இல்லையே" என மெய்சிலிர்த்து போனார்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்