ஆப்நகரம்

Win with Humility: வெற்றிக்குத் தேவை முயற்சியும், பலம் மட்டுமல்ல... அடக்கம் என்பதை உணர்த்திய பிரம்மன்

வெற்றிக்கு பலமும், முயற்சியை விட மிக முக்கியம் அடக்கம் என்பதை தேவர்களுக்கு உணர்த்திய பிரம்ம தேவர். புராண கதை மூலம் கிடைக்கும் வாழ்க்கை பாடம்.

Samayam Tamil 10 Oct 2019, 2:39 pm
ஒரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது. இதில் பிரம்ம தேவனின் அருளால் தேவர்கள் வெற்றி பெற்றனர். இருப்பினும் தங்களின் சக்தியால் தான் இந்த வெற்றி சாத்தியமானது என தேவர்கள் மிதப்பில் ஆழ்ந்தனர்.
Samayam Tamil brahma 1
brahma deva


ஆணவத்தை அடக்கிய உணர்த்திய பிரம்மன்:
தேவர்களின் ஆணவத்தை அறிந்த பிரம்ம தேவன், எப்போதும் போல நான்கு முகத்தோடு இல்லாமல், ஒரு முகமாக மாறி இந்திர லோகத்திற்குச் சென்றார். பிரம்ம தேவரின் உருவ மாற்றத்தால் யார் வந்திருக்கிறார் என்று அறியாத இந்திரன், அக்னி பகவானை அனுப்பி யார் வந்துள்ளார் என பார்க்க சொன்னார்.

இந்திர லோக வாயிலுக்குச் சென்ற அக்னியைப் பார்த்து பிரம்ம தேவன் முந்திக் கொண்டு, ‘யார் நீ?’ என கேட்டார்.

கோவில் கோபுரங்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?

அதற்கு நான் தான் அக்னி. யாக குண்டத்தில் போடப்படும் பொருட்களை, எல்லா தெய்வங்களுக்கும் அர்ப்பணம் செய்பவர் நான் தான் என்றார். நான் நினைத்தால் அனைத்தையும் அழிக்க முடியும் என்றார்.

பிரம்மன், அப்படியா... சரி இந்த சிறு துரும்பை உன் நெருப்பால் அழித்து விடு பார்க்கலாம் என்றார்.
இவ்வளவு தானா இதோ செய்கிறேன் என அக்னியை ஊதினார். ஆனால் அது எரியாததால், பலமாக ஊதினான். இருப்பினும் எந்த பிரயோஜனமும் இல்லை.

வெகு நேரமாகியும் அக்னி பகவான் வராததால், வாயு பகவானை அனுப்பினான் இந்திரன்.
இப்போதும் முந்திக் கொண்ட பிரம்மன், ‘நீ யார்?’ என கேட்க, நான் தான் வாயு பகவான். நான் இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது என்றான்.

காக்கையாக மாறி காவிரியை உருவாக்கிய கணபதி புராண கதை...

சரி, ‘இந்த சிறு துரும்பைச் சிறிது நகர்த்து பார்க்கலாம்’ என்றார்.

இதோ வீசி எரியச் செய்கிறேன் என வாயு பகவான் முயற்சிதான். இருப்பினும் கொஞ்சம் கூட நகராமல் அந்த துரும்பு அங்கேயே இருந்தது.

அகந்தையை அழித்த ஆதிபராசக்தி:
அக்னி, வாயு இருவரும் வெகு நேரமாக வராததால், இந்திரனே நேரில் வந்தான். அங்கிருந்து பிரம்மன் மறைந்து, ஒரு சிறுமி அங்கு தோன்றினாள்.

பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்: முக்கியத்துவமும் பலன்களும்

இந்திரன் வந்ததும், யார் இந்த சிறுமி என கேட்டான்.

“அற்பர்களே, தேவர்களான உங்களின் ஒவ்வொருவரிடமும் இருக்கும் சக்தி என்னிடம் இருந்து தான் வந்தது” என கூறி ஆதிபராசக்தியாக உருவெடுத்து நின்றாள்.

வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையிலும் ஒருவன் தன் அடக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்பவன், வெற்றி பெற்றாலும் அழியக்கூடியவன் ஆகிறான் என்றாள்.

தவறை உணர்ந்த தேவர்கள்:தங்களின் தவற்றை உணர்ந்த தேவர்கள் சக்தியிடமும், பிரம்ம தேவரிடமும் மன்னிப்பு கேட்டு சரணடைந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்