ஆப்நகரம்

குழந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய குரு பகவான் ஸ்லோகம்

பலரும் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என பல கோயில் கோயிலாக ஏறி இறங்குவதுண்டு. குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்ற குறளுக்கேற்ப, குழந்தை இல்லாதவர்கள் படும் பாடு சொல்ல முடியாத துன்பத்தை தருவதாகும். புத்திர பாக்கியத்தை பெற சொல்ல வேண்டிய குரு மந்திரத்தை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 8 Apr 2020, 8:43 pm
குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கிய எனும் மகத்தான பலனை தரக் கூடியவர்.
Samayam Tamil Mantra For Getting Pregnant
Mantra For Getting Pregnant


குழந்தை பாக்கியம் பெற குரு பகவானுக்குரிய மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் சொல்லி வர கிடைக்கும் என நம்பப்படுகிறது.

குரு பகவான் என்பவர் ஆசிரியராக மட்டுமல்லாமல் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்னை, நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்புரிகிறார்.

குரு பகவான் புத்திர பாக்கியத்தை தருவதோடு, காது, கல்லீரல், இடுப்பு உள்ளிட்ட நோய்களுக்கு அவர் மருந்தாக குருவின் மந்திரம் இருக்கிறது.

கொரோனா வைரஸும் தெய்வ குற்றமும் : கோயில் திருவிழாவுக்கு பின் இருக்கும் அறிவியல்
குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.

குரு பகவான் காயத்ரி மந்திரம்:
வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

ராமாயணத்தில் சீதா பிராட்டி சிறை வைக்கப்பட்ட இடம் இப்போது எப்படி இருக்கிறது

குரு சுலோகம் :
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குழந்தை பாக்கியத்திற்கான கிரக நிலை

குரு மந்திரம் :
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்