ஆப்நகரம்

ஒரே மருந்தில் பல நோய்களை குணமாக்குவது எப்படி : வீட்டின் கஷ்டத்தை போக்குவது எப்படி?

ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது, எப்படி கஷ்டமான சூழலை கையாள்வது, உடல் ஆரோக்கிய பிரச்னையிலிருந்து தப்பிப்பது என்ற பல கேள்விகளை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஸ்வஸ்திக் சித்தி தான் அவர்கள் எளிய முறையில் அதற்கான தீர்வு வழங்கியுள்ளார்.

Samayam Tamil 2 Mar 2020, 4:04 pm
ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது, எப்படி கஷ்டமான சூழலை கையாள்வது, உடல் ஆரோக்கிய பிரச்னையிலிருந்து தப்பிப்பது என்ற பல கேள்விகளை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஸ்வஸ்திக் சித்தி தான் அவர்கள் எளிய முறையில் அதற்கான தீர்வு வழங்கியுள்ளார்.
Samayam Tamil how to increase your wealth and improve your physical mental health for observance siddhar
ஒரே மருந்தில் பல நோய்களை குணமாக்குவது எப்படி : வீட்டின் கஷ்டத்தை போக்குவது எப்படி?


​வீட்டில் கஷ்டம் ஏற்படுவது எதனால்?

வீட்டில் கஷ்டம் ஏற்படுவது எதனால்?

ஒரு வீட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியமானது கல்வி, செல்வம், வீரம். இந்த மூன்றில் ஒன்று குறைந்தாலும் வீட்டில் கஷ்டம் ஏற்படக் கூடும்.

கல்வி இருந்தால் அவர் நிச்சயம் ஞானத்தைப் பெற்று ஒரு சிறந்த அதிகாரி பதவிக்கு சென்று பொருளை ஈட்டலாம்.

செல்வம் இருந்தால் எந்த சாதனையையும் செய்யக் கூடிய அல்லது எதையும் வாங்கி விட முடியும் என்பதை தாண்டி, பல நல்ல தர்ம காரியங்கள், சேவைகள் செய்து நல்ல பெயர், புகழ் பெற்று சிறக்கலாம்.

வீரம் மிக முக்கியமானது ஆரோக்கியம். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நம் கடமையை சரியாக செய்ய முடியும். நமக்கு மட்டுமில்லாமல், பலருக்கும் உதவியாக இருக்க முடியும்.


உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையச் செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?


கல்வி, செல்வம், வீரம் இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் ஒரு குடும்பத்தில் மிக கஷ்ட நிலை வந்து விடும்.

மனிதன் சிறப்பாக வாழ இறைவன் அனைத்தையும் இந்த பூ உலகிற்கு அருளியுள்ளார்.

இந்த உலகில் மரம் கொடி, மிருகம் அதன் பின்னர் மனிதர்களை தான் மிக அதிகமாக இறைவன் படைத்துள்ளான்.

எல்லா மனிதர்களும் புண்ணியம் செய்தவர்கள். மனிதர்களுக்கு தான் சகல ஞான சக்திகளை கொடுத்திருக்கின்றார். இந்த ஞானத்தின் மூலம் நாம் செய்த எல்லா நல்லது, கெட்டதையும் நமக்கு தெரியவரும். அதை மீறி செய்வது தான் பாவம். புண்ணியம்.

நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை தாண்டி நாம் செய்வது தான் கணிகை.


மகா லட்சுமி எப்படி தோன்றினார், விஷ்ணு பகவான் எப்படி கரம்பிடித்தார் தெரியுமா? - புராண கதை இதோ


கலியுகம் ஆரம்பம்:

நன்றாக வாழ வேண்டுமென்றால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியமாக இருந்தால் தான் நமக்கான கடமைகளை சரிவர செய்ய முடியும்.

முன்னர் 100 வயது வரை வாழ்ந்து வந்த மனிதர்கள் தற்போது 60 -70 வரை தான் சராசரியாக வாழ்கின்றனர்.

லட்சக்கணக்கான குழந்தைகள் ஆரோக்கிய குறைபாடு காரணமாக இறந்து போகும் நிலை நீடிக்கின்றது. நோயினால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

உலகில் அடுத்தடுத்து ஏதேனும் நோய் தாக்குதல் வந்து கொண்டிருக்கின்றது.

இதற்கு தற்போது நாம் கடைப்பிடித்து வரும் உணவு முறை மிக முக்கியமானதாக உள்ளது. நம் நல்ல பழக்க வழக்கங்களையும், நல்ல உணவு முறைகளையும் மறந்ததன் விளைவாக பல உயிர் பலி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.


இது தான் கலியுகம் என்கிறார்கள். வேதத்தில் உலக வாக்கியத்தில், உலக அழிவு ஆரம்பம் குறித்து எழுதப்பட்டுள்ளது.

நல்ல ஆரோக்கியமாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு மருந்து

நாம் இதுவரை சரியான உணவு முறை கடைப்பிடிக்காமல் இருந்தாலும், இனியேனும் கடைப்பிடித்து ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள். அதோடு சித்தர்கள் எளிதாக கிடைக்கக் கூடிய மூலிகைகளை வைத்து பல கொடிய நோய்களைக் கூட தீர்த்துள்ளனர்.

அன்றாடம் பார்க்கும் மூலிகைகள்

அப்படி இங்கு ஸ்வஸ்திக் சித்தி தாய் அவர்கள் எளிதாக கிடைக்கக் கூடிய மூலிகைகள் வைத்து ஒரு லேகியம் செய்வது எப்படி என்பதை விளக்கியுள்ளார்.

இதை எடுத்துக் கொள்ள கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். ஏனென்றால் சித்தர்கள் அந்த காலத்திலேயே எந்தெந்த நோய்க்கு என்னென்ன மூலிகை மருந்துகள் இருக்கின்றது. எந்த இலை எப்போதெல்லாம் பயன்படும் என்பதை குறிப்பெழுதி வைத்துள்ளனர்.

அதனால் உலகில் உள்ள அனைவரும் மிக ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ இந்த லேகியத்தை 48 நாட்கள் சாப்பிடுவது அவசியம். மூன்று வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த லேகியத்தை எடுத்துக்கொள்ளலாம்.


செல்வங்களை அள்ள ஜோதிடம் கூறும் அருமையான வழிகள்

​லேகியம் செய்ய தேவையானவை:

லேகியம் செய்ய தேவையானவை:

வேப்ப இலை - 10 இலை

வெற்றிலை - பாதி வெற்றிலை

கற்பூரவல்லி

பப்பாளி இலை ( ஒரு வெற்றிலை அளவு)

மிளகு

சீரகம்

பூண்டு

இஞ்சி

வில்வ இலை ஒன்று

அரச இலை ஒன்று

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இதனை அரைத்து வைத்து மறுநாள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நாள் அரைப்பதை அன்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.


ருத்ராட்சம் எப்படி அணிந்தால் சக்தி கிடைக்கும், பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? - ருத்ராட்ச பலன்கள் (ஸ்வஸ்திக் சித்தி தாய் விளக்கம்)

துளசி தண்ணீர்

இந்த லேகியத்தை எடுத்துக் கொண்ட பின்னர் அரை டம்பளர் அளவு தண்ணீர் குடிக்கலாம். (துளசி தண்ணீர் எடுத்துக் கொள்வது மிக விசேஷ பலன் தரும்). குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது எந்த ஒரு உணவு பொருளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதன் பின் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டு வர மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.


துளசி செடிக்கு பூஜை ஏன் செய்ய வேண்டும், அதன் மகத்துவம் தெரியுமா?

​ஆங்கில மருந்து சித்த மருந்துக்கு உள்ள வித்தியாசம்:

ஆங்கில மருந்து சித்த மருந்துக்கு உள்ள வித்தியாசம்:

பொதுவாக ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டால் உடலில் இருக்கும் பிரச்னையை மறத்து போக வைக்கும். நோயை குறைக்குமே தவிர முழுவதும் சரியாகாது. அதனால் ஆங்கில மருந்தை தினமும் வழக்கமாக எடுத்துக் கொள்ள சொல்கின்றனர். ஆனால் சித்த மருந்தை 48 நாட்கள் எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஒவ்வொரு மூலிகை இலையின் சக்தி நம் உடலில் ஊறப்படும். ஒவ்வொரு இலையின் மருத்துவ குணமும் நம் ரத்தத்தில் கலந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த லேகியத்தை எடுத்துக் கொண்ட பின் துளசி தண்ணீரை பருவதால் எந்த ஒரு நோய், புண்கள் வந்தாலும் உடனே குணமாகி விடும். தலைவலி, காய்ச்சல் வராது. அப்படியே வந்தாலும் 3 நாட்கள் இந்த லேகியம் சாப்பிட்டு துளசி தண்ணீர் அருந்தினால் அடுத்து வருவது அபூர்வமே.

இரத்த குறைப்பாடு, இரத்த பிரச்னைகள் தீரும்.


ஏன் செவ்வாய்க் கிழமையில் முடி வெட்டுதல், சவரம் செய்யக்கூடாது தெரியுமா? - இத்தனை விஷயங்கள் நம்மை பாதிக்குமாம்

இயற்கை உணவுகள்

அதுமட்டுமல்லாமல் தினமும் பழங்களும், தயிர் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். தினமும் குழந்தைகளுக்கு தயிர் சாதக் கொடுத்தால் மிகவும் நல்லது. அவர்களின் உடல் நலம் மகா மங்கலமாக இருக்கும்.

சளி, காய்ச்சல் வருகின்றது என பலரும் பழங்களை கொடுக்க தயங்குகின்றனர். தினமும் சிறிய அளவு வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொடுத்து வர அவர்களின் உடல் இயக்கம் சிறக்கும்.


சாபத்தால் பிச்சை எடுத்த சிவனை விடுவித்த அங்காலபரமேஸ்வரி - மயான கொள்ளை


அதே போல் காய்கறிகளை சூப் வைத்து கொடுப்பது நல்லது. முடிந்த வரை எண்ணெய் பலகாரங்களை கொடுக்கவே வேண்டாம்.

தற்போது கூட கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் இறந்து போய் உள்ளனர். அதற்கு சரியில்லா உணவு பழக்க வழக்கமும், உடல் எதிர்ப்பு சக்தி குறைவும் தான்.

அதனால் இந்த லேகியத்தைச் செய்து சாப்பிட்டு உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

Video-ஒரே லேகியத்தில் பல நோய் குணமாக்குவது எப்படி?

பழங்களும், காய்கறிகளும்

அதுமட்டுமல்லாமல் தினமும் பழங்களும், தயிர் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். தினமும் குழந்தைகளுக்கு தயிர் சாதக் கொடுத்தால் மிகவும் நல்லது. அவர்களின் உடல் நலம் மகா மங்கலமாக இருக்கும்.

சளி, காய்ச்சல் வருகின்றது என பலரும் பழங்களை கொடுக்க தயங்குகின்றனர். தினமும் சிறிய அளவு வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொடுத்து வர அவர்களின் உடல் இயக்கம் சிறக்கும்.


அதே போல் காய்கறிகளை சூப் வைத்து கொடுப்பது நல்லது. முடிந்த வரை எண்ணெய் பலகாரங்களை கொடுக்கவே வேண்டாம்.

தற்போது கூட கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் இறந்து போய் உள்ளனர். அதற்கு சரியில்லா உணவு பழக்க வழக்கமும், உடல் எதிர்ப்பு சக்தி குறைவும் தான்.

அதனால் இந்த லேகியத்தைச் செய்து சாப்பிட்டு உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்