ஆப்நகரம்

காமாட்சியை திருமணம் செய்த சிவபெருமான்: பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் மனப்பொருத்தம் பெற காரடையான் நோன்பு கடைப்பிடிப்பது நல்ல பலனை தரும். காமாட்சி அம்மனை சிவன் திருமணம் செய்த புராண கதையை இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 30 Mar 2020, 8:55 pm
இந்த காலத்தில் சிறிய பிரச்னையினால் கூட கணவன் - மனைவி பிரிவு ஏற்படுவது வருத்தத்தை தருவதாக உள்ளது.
Samayam Tamil Karadaiyan Nonbu
Karadaiyan Nonbu

குழந்தைகள் சிறுவயதில் இருந்து எந்த கண்டிப்பும் இல்லாமல் வளரும் போது அவர்கள் மண வாழ்வில் இணையும் போது அவர்களுக்குள் ஏதேனும் சிறு பிரச்னை என்றால் கூட அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படுவதோடு, நான் என்னும் அகங்காரம் அதிகரித்தலும், என்னையா திட்டிவிட்டாய் என பிரிவு வரை செல்வதுண்டு.

அப்படி பிரிந்து சென்ற தம்பதியர் சேர்ந்ந்து வாழ ஆசைப்பட்டாலும் அவர்களுக்குள் இருக்கும் அகங்காரம் அதை ஏற்காமல் இருக்கும். இல்லையெனில் துணை ஏற்றுக் கொள்ளாத நிலை இருக்கும். இப்படி பட்டவர்கள் கூட தம்பதிகளை இணைத்து வைக்கக் கூடிய காரடையான் விரதம் இருப்பதால் ஒற்றுமை ஏற்படும்.



இதன் காரணமாக பெருமகிழ்ச்சி அடைந்த ஈசன், அன்னைக்கு காட்சி கொடுத்து காமாட்சி அம்மனை மணந்து கொண்டார்.

இப்படி தெய்வங்களே அனுஷ்டித்த காரடையான் நோன்பு, திருமணமான தம்பதியர் அனுஷ்டிப்பது சிறப்பானது. பிரிந்தவர்கள் ஒன்று சேர மட்டுமல்ல. சேர்ந்திருக்கும் தம்பதியரின் அன்பும் அரவணைப்பும் பெருக இந்த காரடையான் நோன்பு சிறப்பான பலனை தரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்