ஆப்நகரம்

Pongal 2023 : தைப் பொங்கல் 2023 எப்போது ? பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. வேளாண்மை, வேளாண் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இயற்கைக்கு நன்றி தெரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 12 Jan 2023, 10:45 am
2023 ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் இந்த விழாவை கொண்டாட உள்ளோம். பொங்கல் பண்டிகையை கொண்டாட உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தற்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.
Samayam Tamil pongal festival 2023 date and auspicious time for making pongal
Pongal 2023 : தைப் பொங்கல் 2023 எப்போது ? பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?


தைப்பொங்கல் 2023

தமிழர் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தைப் பொங்கல் திருநாள். தமிழர் திருநாள் என்றும், விவசாயத்தை மையப்படுத்தியும் கொண்டாடப்படும் தைத் திருநாள் நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்து, புதிதாய் விளைந்த நெல் மணியில் இருந்து கிடைத்த பச்சரிசியைக் கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் மரபு. விவசாயம் நன்று நடக்கும் உறுதுணையாக இருக்கும் சூரியன், காளை மாடு, இயற்கை ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிப்பதே பொங்கல் பண்டிகையின் நோக்கம்.

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் வழிபாடு பலன்கள் : அஷ்ட லிங்கங்களின் பெயர்கள்

​நான்கு நாட்கள் விழா :

மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப் பண்டிகையின் நோக்கமாகும். இரண்டாம் நாள் தைப்பொங்கல் அன்று, வீட்டு வாசலில் சூரிய உதயத்தின் போது பொங்கல் வைத்து, அதை இலையில் படைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறோம். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், கள்ளக்குறிச்சி - 108 திவ்ய தேசம் 42வது கோவில்

தமிழர் திருநாள்

நான்காம் நாள் விழாவாக காணும் பொங்கல் கொண்டாடப்படும். இதை கணு பொங்கல் என்றும், கன்னி பொங்கல் என்றும் சொல்வதுண்டு. இந்த நாளில் மக்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை சென்று சந்தித்து தங்களின் மகிழ்ச்சி, வாழ்த்து மற்றும் இனிப்புக்களை பரிமாறிக் கொள்வதே காணும் பொங்கல் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.

சூரியனின் பயணம் :

பொங்கல் பண்டிகை தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. சூரியன் எந்த ராசியில் தனது பயணத்தை துவக்குகிறாரோ அதற்கு ஏற்க அந்தந்த மாதத்திற்கு பெயர் வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

யார் இந்த ஆழ்வார்கள் ? பன்னிரு ஆழ்வார்கள் சிறப்பு என்ன?

​2023 ல் பொங்கல் எப்போது ?

2023 ம் ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜனவரி 14 ம் தேதி போகிப் பொங்கல், ஜனவரி 15 ம் தேதி சூரிய பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் வைக்க நல்ல நேரம் :

ஜனவரி 15 :

நல்ல நேரம் - காலை 07.30 மணி முதல் 08.30 வரை

மாலை 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

பொங்கல் வைக்க சரியான நேரம் - காலை 07.45 முதல் 08.45 வரை

வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :

ஜனவரி 16 : காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்