ஆப்நகரம்

புரட்டாசி பௌர்ணமி 2020 விரதம் மகிமையும், வழிபாட்டு முறையும்

புரட்டாசி மாத பெளர்ணமி நாளில் விரதமிருந்து வழிபடுவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும். பெளர்ணமி சந்திரனை வழிபடுவதால் உண்டாகும் சுபபலன்களைப் பார்ப்போம்...

Samayam Tamil 1 Oct 2020, 5:42 pm
கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கக் கூடிய தமிழ் மாதத்தை புரட்டாசி மாதமாகும். இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் ஒன்று இந்த புரட்டாசி மாதம்.
Samayam Tamil Purattasi Pournami
Purattasi Pournami


புரட்டாசி மாதத்தில் தான் பிரம்மோற்சவம் போன்ற கோயில்களில் நடைப்பெறக்கூடிய மிகப்பெரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட

இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்ற உன்னத நாளில் நம் பிதுர்களை திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடக்கூடிய மிக முக்கியத்துவம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகிறது.

சிவ புராணம் மாணிக்கவாசகர் அருளிய‌ - நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க பாடல்

அமாவாசை மட்டுமல்லாமல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி நாளும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமி பெரும்பாலும் உத்திரட்டாதி நட்சத்திர அமைக்கூடிய நாளில் தான் வருகிறது. இந்த தினத்தில் உமாமகேஸ்வரரை வழிபடுவதற்கு மிக உகந்த நாள்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் வழிபாடு முறை

இந்த மிக சிறப்பு வாய்ந்த நாளில் அம்மை அப்பரை வழிபடுவதன் மூலம், நம் பொருளாதார பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். குறிப்பாக கடன் பிரச்னைகள் தீரும். நாம் வெகு நாட்களாக முயற்சித்து தடைப்பட்டு வந்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிக்கலாம்.

நம் மனதை ஆளக்கூடிய சந்திரனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே

புரட்டாசி பெளர்ணமி தினத்தில் விளக்கேற்றி சிவபெருமானையும், சந்திரனை வழிபட்டு வந்தால் சுப காரியங்கள் விரைவாக நடைப்பெறும். திருமண பேறு கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்