ஆப்நகரம்

மோட்சம் பெறுவதற்கு ஸ்ரீ ரமண மகரிஷி உபதேசித்த மந்திரம்

அத்வைத வேதாந்த நெறியை போதித்தவர் ரமண மகரிஷி. திருவண்ணாமலையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமம் மிகவும் புகழ்பெற்றதாகும். இளம் வயதிலேயே திருவண்ணாமலை என்ற பெயரை கேட்ட மாத்திரத்திலேயே ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டவர் ரமண மகரிஷி.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 15 Apr 2023, 9:47 pm
ரமண மகரிஷிக்கு தனது 16 வது வயதில், மரண உணர்வு ஏற்பட்டது. மரணத்தில் மரணிப்பது இந்த உடல் தான் என்றால், நான் யார் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இந்த தேடலே அவரை மகான் ஆக்கி, தெய்வ நிலைக்கும் கூட்டிச் சென்றது.
Samayam Tamil ramana maharshi quotes mantra for attain moksha
மோட்சம் பெறுவதற்கு ஸ்ரீ ரமண மகரிஷி உபதேசித்த மந்திரம்


ரமண மகரிஷி :

இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக குருமார்கள் அவதரித்து, மக்களுக்கு நல்வழி காட்டி உள்ளனர். ஆன்மீக குருமார்கள் என்றாலே இறைவனை அடையும் அல்லது உணரும் வழி, முக்தி பெறுவதற்கான வழிகளை தேடியும், போதித்தும் வந்தனர். அவர்களுக்கு நடுவே, நான் யார் என்பதை உணருவதற்கு வழி தேடியவர் ஸ்ரீ ரமண மகரிஷி.



திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார் கோவிலுக்கு அடுத்தபடியாக நினைவிற்கு வருவது ரமணரும், அவரது ஆசிரமம் பற்றிய நினைவும் தான். அண்ணாமலையின் கிரிவல பாதையில் ரமண மகரிஷியின் ஆசிரமம் அமைந்துள்ளது. நான் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக இளம் வயதிலேயே உலக இன்பங்களை துறந்து, துறவறம் பூண்டவர்.

அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்

​நான் யார் ?

" நான் யார் என்று உன்னை நீயே கேட்டுப் பார். உன் பிறப்புக்கு அர்த்தம் புரியும். அதுன் பின்னர் உனது பாதையும் பயணமும் சுலபமாகும்" என்று சொன்னவர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி. துறவியாய், எளிமையாய் வாழ்ந்தவர் ரமணர். இவர் மோட்சம் பெறுவதற்காக தனது உதவியாளர்களுக்கு உபதேசித்த மந்திரம் என்னவென்று நாமும் தெரிந்து கொள்வோம்.

​ரமணரின் கருணை :

ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேச மொழிகள், போதனைகள் ஆகியன 'நூல் திரட்டு' என்ற பெயரில் வெளிவந்தது. அந்த சமயத்தில் அது பெரிய விஷயமாக இருந்தது. எல்லோரும் ஆவலுடனும், மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை வாங்கினார்கள். ஆசிரமத்தில் இருந்த அனைவரின் கைகளிலும் அந்த புத்தகம் இருந்தது. ஆசிரக நிர்வாகியான சின்ன சுவாமி மிகவும் கண்டிப்பானவர். யாருக்கும் ஓசி கொடுக்கமாட்டார். ஆசிமத்தில் சேவை செய்பவர்களுக்கும் இதே விதி தான். அனைவரும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். இதில் யாரும் விதிவிலக்கல்ல.

நூல் திரட்டு வெளிவந்த தினத்தில், தன்னிடம் இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில், நூல் திரட்டில் இருந்த அனைத்தையும் அச்சில் எப்படி உள்ளதோ அதே போன்று தனது கையெழுத்தில் மெதுவாக எழுத துவங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதினார். எதற்காக அதை எழுதுகிறார் என யாருக்கும் புரியவில்லை. ரமணரும் யாரிடமும் கூறவில்லை. அந்த புத்தகம் முழுவதையும் எழுதி முடித்ததும், தனது உதவியாளரான சிவானந்தத்தை அழைத்து, "இதை நீ வைத்துக் கொள். காசு கொடுத்து வாங்க நீ எங்கே போவாய் காசுக்கு? நானே எழுதி இருக்கேன். வச்சுக்கோ" என்றார்.

வருதினி ஏகாதசி 2023 : சனிக்கிழமையில் வரும் ஏகாதசி விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும்? என்ன பலன் கிடைக்கும்?

​நெகிழ்ந்த உதவியாளர் :

ஆசிரமத்தில் இருந்த அனைவரும் தங்களிடம் காசு இருந்ததால் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி விட்டனர். ஆனால் சிவானந்தர், கிராமத்துக்காரர். அவரிடம் காசு இல்லை என்பதை உணர்ந்த ரமணர் தானே கைப்பட அந்த புத்தகம் முழுவதையும் எழுதிக் கொடுத்தார். இதை கண்டு சிவானந்தர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடத் துவங்கினார். தனது நிலைமை, மற்றும் ஆன்மிக தன்மையை ரமணர் மதித்தது அவரை நெகிழ வைத்தது.

திருப்பதியில் இதெல்லாம் மாற போகுது : பக்தர்கள் கவனமாக குறித்து வைத்துக் கொள்ளவும்

ரமணர் சொன்ன மோட்ச மந்திரம் :

பணிவுடன், ரமணர் கொடுத்த நோட்டு புத்தகத்தை பெற்றுக் கொண்ட சிவானந்தர், பகவானே ! எனக்கு மோட்சம் கிடைக்கற மாதிரி விசேஷமாக ஒரு மந்திரத்தை உபதேசம் பண்ணுங்க. அதை நான் எப்பவும் ஜபம் செய்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த ரமண மகரிஷி, "உனக்கு நீயே உண்மையாய் இரு" என்றார். மோட்சம் பெறுவதற்கு ஒரே வழி இது மட்டுமே என ரமண மகரிஷி உபதேசித்தார்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்