ஆப்நகரம்

Thirumana thadai vilaga : பல பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கவில்லையா? அப்போ நீங்க வணங்க வேண்டிய தெய்வம் இது தான்

வாழ்வில் ஏற்படும் எத்தனையே பிரச்சனைகள் தீருவதற்காக பல பரிகார தலங்களுக்கு சென்று வழிபடுகிறோம். விரதங்கள், பூஜைகள் என ஜோதிடர்கள் உள்ளிட்ட பலரும் சொல்லும் பல வழிகளை கடைபிடிக்கிறோம். இவற்றில் பணப் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம் போன்ற பிரச்சனைகளுக்காக கோவிலுக்கு வருபவர்களே அதிகமாக உள்ளனர்.

Samayam Tamil 13 May 2023, 11:06 pm
சிலருக்கு என்ன காரணம் என்றே தெரியாமல் தொடர்ந்து திருமணம் தள்ளி போய் கொண்டே இருக்கும். நல்ல சம்பளம், நல்ல வேலை என அனைத்தும் இருந்தும் திருமணம் கைகூடி வராமல் இருக்கும். எத்தனையோ வரன் பார்த்தும், பரிகாரங்கள் செய்தும் திருமணம் கை கூடவில்லை என வருத்தம் இருக்கும்.
Samayam Tamil marriage


ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், நாக தோஷம் ,கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், இருதார யோகம், குரு திசை சரியில்லை என பல காரணங்கள் திருமண தடைக்கு சொல்லப்படுகின்றன. இதற்காக பல கோவில்களுக்கும் சென்று பல பரிகாரங்களை செய்திருப்போம், விரதம் இருந்திருப்போம். ஆனால் திருமணம் நடப்பதில் ஏதோ சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.

திருப்பதி அனுமன் ஜெயந்தி விழாவில் பங்கேற்க போறீங்களா? இதை முக்கியமா தெரிஞ்சுக்கோங்க

இன்னும் சிலருக்கு திருமணம் தேதி முடிவாகி, நிச்சயதார்த்தம் வரை போன பிறகு, சிலருக்கு நிச்சியதார்த்தம் முடிந்த பிறகு கூட திருமணம் பாதியில் நின்று போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். திடீரென ஏற்பட்ட பண பற்றாக்குறையால் திருமணம் நின்று போனது என்று கூட கேள்விப் பட்டிருக்கிறோம்.

இப்படி திருமண தடை உள்ளவர்கள் பார்ப்பவர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என சளித்து போய் இருப்பார்கள். இவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள யோக பைரவர் கோவிலில் மூலவர் சன்னதி முன் யோக நிலையில் இருக்கும் ஜெயந்தி நாதரை தரிசனம் செய்து, நம்முடைய மனக்குறைகளை சொல்லி வழிபட்டு விட்டு வந்தால் மிக விரைவில் திருமண தடை நீங்கி, ஒளிமயமான, மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கை அமையும்.

திருநாவுக்கரசர் குருபூஜை : ராவணனின் சாபம் தீர அப்பர் சொன்ன வழி

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்தில் உள்ள மூன்று உற்சவங்களில் ஒருவருக்கு தான் ஜெயந்திநாதர் என்று பெயர். அதென்ன ஜெயந்திநாதர் என சந்தேகம் பலருக்கும் வரும். இதற்கும் புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இந்திரனின் மகனுடைய பெயர் தான் ஜெயந்தன். திருச்செந்தூர் தலத்தில் சூரபத்மனுடன் முருகன் போரிட்ட போது ஜெயந்தனும் முருகனின் படையில் முக்கிய இடம் வகித்திருந்தார். இந்த போரின் போது ஜெயந்தனை சூரபத்மன் சிறைபிடித்து சென்று விடுவான். அசுரர்களிடம் இருந்து ஜெயந்தனை மீட்டு வந்த முருகனின் திருக்கோலத்திற்கு ஜெயந்திநாதர் என்று பெயர். ஜெயந்திநாதர் என்றால் வெற்றிகளின் தலைவன் என்று பொருள்.

கெட்ட நேரம் நல்ல நேரமாக மாற வேண்டுமா? ஒரே ஒரு முறை இதை மட்டும் செய்யுங்க

திருச்செந்தூரில் உற்சவங்களில் ஒருவராக இருக்கும் ஜெயந்திநாதரின் திருவுருவம் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் திருப்பத்தூரில் உள்ள ஜெயந்திநாதர் மிகப் பெரிய சிலை வடிவில் காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் திருமண தடை உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்