ஆப்நகரம்

Dharbaranyeswarar Temple: இன்று சனிப்பெயர்ச்சி : திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை கிடையாது... ஏன் தெரியுமா?

சனிப்பெயர்ச்சி 2020 திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று நடக்கும் நிலையில், சனீஸ்வர வழிபாட்டுக்கு மிக பிரபலமான திருநள்ளாறு கோயிலில் சிறப்பு பூஜை இன்று நடத்தப்படவில்லை.

Samayam Tamil 24 Jan 2020, 12:04 pm
தமிழகமே எதிர்பார்க்கும் பல்வேறு நிகழ்வுகளில் இன்றைய நாயகனாக சனிப் பெயர்ச்சி ஆகும் நிகழ்வு உள்ளது. நவ கிரகங்கள் உள்ள நிலையில், அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சி ஆவது வழக்கம். இது இயற்கையான நிகழ்வு. இருப்பினும் சனிப்பெயர்ச்சி என்பது மக்களால் மிக ஆர்வமாக தங்களின் ராசிக்கான பலனை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
Samayam Tamil திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்
Tirunallar Saniswaran Temple


ஏனெனில் மற்ற கிரகங்களை விட சனி கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் இருந்து பலன் கொடுப்பதால் தான்.

சனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

கிரக பெயர்ச்சி காலம்:
சந்திரன் - 2 1/4 நாட்கள் (54 மணி நேரம்)
சூரியன் - ஒரு நாள்
புதன் கிரகம் - 27 நாட்கள்
செவ்வாய் - 45 நாட்கள்
குரு பகவான் (வியாழன்) - சுமார் ஒரு ஆண்டு
ராகு - கேது கிரகங்கள் - ஒன்றரை ஆண்டுகள்
சனி கிரகம் - சுமார் 2 1/2 (இரண்டரை ஆண்டு)
இதில் ஒரு ராசியில் மிக நீண்ட காலம் இருப்பது சனி பகவான்.

இன்று சனிப்பெயர்ச்சி:

நம் முன்னோர்கள் பல காலமாக வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என இரு பஞ்சாங்கங்கள் பின் பற்றி வருகின்றனர். இரண்டிற்கும் ஒரே மாதிரியான பலன்கள் தான் இருக்கும். இருப்பினும், இரு பஞ்சாங்கத்தில் சிக்கல் என்னவென்றால், கிரகங்களின் பெயர்ச்சியில் உள்ள மாறுபாடு தான்.

சனிப்பெயர்ச்சியால் ரஜினி கட்சி தொடங்குவாரா? தமிழகத்தில் ஆட்சி பிடிப்பாரா?

இதுவரை வந்த கிரக பெயர்ச்சிகள் ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் தற்போது சனி பெயர்ச்சி கிட்டத்தட்ட 11 மாத வித்தியாசம் உள்ளது.

அதாவது இன்று ஜனவரி 24, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி நண்பகல் 12.05க்கு மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார் என கூறப்படுகிறது.

அதே சமயம் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 11 மாதங்கள் கழித்து தான் அதாவது 2020 டிசம்பர் 26ஆம் தேதி தான் நடைப்பெறப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இன்றுசனிப்பெயர்ச்சி 2020 நடக்குதா இல்லையா? : திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் இவற்றில் எதை நம்புவது?

திருநள்ளாற்றில் சிறப்பு பூஜை இல்லை:
சனீஸ்வரர் வழிபாட்டுக்கு மிக சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக பார்க்கப்படும் திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரர் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுவதால், இன்று எந்த ஒரு சிறப்பு பூஜையும் செய்யப்படாமல் சாதாரண நாட்களில் எப்படி வழிபாடு இருக்குமோ அப்படி தான் இன்று பூஜைகள் செய்யப்படுகின்றன.

முன்னதாக திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கும் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கும் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்