ஆப்நகரம்

Saraswathi puja 2022 : சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்திகள், புகைப்படங்கள்

* மகிஷனை வதம் செய்ய ஒரு சக்தி போதாது என மூன்று தேவியர்களின் சக்திகளும் ஒன்றிணைந்து, மகிஷாசுரமர்த்தினியாக அன்னை உருவெடுத்தாள்.

* அசுரர்களுடன் போருக்கு செல்வதற்கு முன் போருக்கு உரிய ஆயுதங்களை அன்னை வழிபட்ட நாளை தான் நாம் ஆயுத பூஜையாக கொண்டாடுகிறோம்.

* தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட்டால், நாம் செய்யும் செயல்களில் அன்னை வெற்றியை அருள்வாள் என்பது நம்பிக்கை.

Samayam Tamil 3 Oct 2022, 9:54 pm
இறுதியாக அசுரர்களை அழித்து அன்னை போரில் வெற்றி பெற்ற 10 வது நாளை விஜயதசமி விழாவாக கொண்டாடுகிறோம். இவ்விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கா பூஜை என்ற பெயரிலும், அசுர வதம் நடந்து, அன்னையின் வெற்றியை கொண்டாடும் தினம் தசரா என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நம்முடைய மனதிலும், வாழ்விலும் இருக்கும் தீமைகள் அழிந்து, நன்மை பெருகிட, வெற்றிகள் குவிந்திட அன்னை பராசக்தியை வணங்குவோம். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
Samayam Tamil saraswathi puja vijaydasami wishes and quotes
Saraswathi puja 2022 : சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்திகள், புகைப்படங்கள்

அன்னை எடுத்த அவதாரம்

ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என பிரம்மனிடம் வரம் பெற்றான் மகிஷாசுரன். இதனால் தேவர்களையும், மனிதர்களையும் பல விதங்களில் கொடுமைப்படுத்திய மகிஷனின் ஆட்டத்தை அடக்க தேவர்கள், மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். ஆனால் பெண்ணால் மட்டும் அவனுக்கு மரணம் நிகழும் என வரம் பெற்றுள்ளதால், அன்னை ஆதிபராசக்தியிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். மூன்று உலகங்களையும் காப்பாற்ற அன்னை பராசக்தி, துர்க்கா தேவியாக அவதரித்தாள்.

அசுர வதம்

மகிஷனை வதம் செய்ய ஒரு சக்தி போதாது என மூன்று தேவியர்களின் சக்திகளும் ஒன்றிணைந்து, மகிஷாசுரமர்த்தினியாக அன்னை உருவெடுத்தாள். இதற்காக 9 நாட்கள் அன்னை கடும் தவம் இருந்து, ஒரு நாளைக்கு ஒருவர் என பல அசுர கூட்டங்களை அன்னை வதம் செய்தாள். அவ்வாறு அம்பிகை தவம் இருந்து அசுரர்களை வதம் செய்த 9 இரவுகளை தான் நாம் நவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் பராசக்தியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.

ஆயுத பூஜை

அசுரர்களுடன் போருக்கு செல்வதற்கு முன் போருக்கு உரிய ஆயுதங்களை அன்னை வழிபட்ட நாளை தான் நாம் ஆயுத பூஜையாக கொண்டாடுகிறோம். நாம் அன்றாடம் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட்டால், நாம் செய்யும் செயல்களில் அன்னை வெற்றியை அருள்வாள் என்பது நம்பிக்கை.

விஜயதசமி

இறுதியாக அசுரர்களை அழித்து அன்னை போரில் வெற்றி பெற்ற 10 வது நாளை விஜயதசமி விழாவாக கொண்டாடுகிறோம். இவ்விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கா பூஜை என்ற பெயரிலும், அசுர வதம் நடந்து, அன்னையின் வெற்றியை கொண்டாடும் தினம் தசரா என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நம்முடைய மனதிலும், வாழ்விலும் இருக்கும் தீமைகள் அழிந்து, நன்மை பெருகிட, வெற்றிகள் குவிந்திட அன்னை பராசக்தியை வணங்குவோம். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

விஜயதசமி வாழ்த்துக்கள்

அன்னையின் அருள் பெருகட்டும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்