ஆப்நகரம்

தத்தாத்ரேயர் என்பவர் யார்? - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் தலைகளுடன் மும்மூர்த்திகளின் உருவமாக காட்சி அளிக்கும் தத்தாத்ரேயர் யாரின் அவதாரம், எப்படி இருப்பருப்பார் தெரியுமா?

Samayam Tamil 29 Dec 2020, 8:57 am
பலரும் அறிந்திடாத இந்துக் கடவுள்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தத்தாத்ரேயர். மூன்று கடவுள்களின் அம்சமாக இருக்கும் தத்தாத்ரேயரின் அவதரித்த ஜெய்ந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெளர்ணமி தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்று டிசம்பர் 29ஆம் தேதி தத்தாத்ரேயர்
Samayam Tamil Datta Jayanti
தத்தாத்ரேயர் ஜெயந்தி

ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது.


பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை உள்ளடக்கியவராக இருக்கும் கடவுளாக பார்க்கப்படுபவர் தான் தத்தாத்ரேயர். இவரை திருமூர்த்தி எனவும் அழைக்கப்படுவது வழக்கம்.

இவரை சிலர் திருமாலின் அம்சமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் இவர் அத்ரி முனிவருக்கு மகனாக பிறப்பேன் என வாக்களித்த சிவ பெருமான், அவருக்கு தத்தாத்ரேயராகத் தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. இவரைக் குறித்து இராமாயணம், மகாபாரதத்தில் பல குறிப்புகள் உள்ளன.
இதில் முக்கிய குறிப்பாக கார்த்தவீரிய அர்ஜுனன் இவரிடம் வரம் பெற்றதாகா குறிப்புகள் உள்ளன.

இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில் இவரை வணங்கி வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் போன்ற வட மேற்கு இந்தியாவில் வழிபட்டு வருகின்றனர்.

Also Read: இந்து மதத்தில் மங்கலமாக இருக்கும் ஸ்வஸ்திகா குறி ஹிட்லர் கொடியில் எப்படி வந்தது?... வரலாறை தெரிஞ்சிக்கங்க...


தத்தாத்ரேயர் எப்படி இருப்பார்?
தத்தாத்ரேயா, தத்தா அல்லது தத்தகுரு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவர் ஒரு யோக பிரபு, துறவி, கடவுள், யோக பிரபுகளில் ஒருவர் என கருதப்படுகிறார்.

தத்தாத்ரேயார் திரிமூர்த்தியாக அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று முதல் தெய்வங்களின் சொரூபமாகத் திகழ்கிறார். இவரை ஒரு அவதாரம் என்று போற்றப்படுகிறார்.

இவரைக் குறித்து கருட புராணம், பிரம்ம புராணம் மற்றும் சத்வத சம்ஹிதா உள்ளிட்ட நூல்களில் இவர் திருமாலின் அவதாரமாக என்கிறது.

Also Read: ஏன் தமிழ் கடவுளாக முருகனை வணங்குகின்றோம்... சஷ்டியின் சிறப்புகள்

உருவப்படம்

இவருக்கான உருவப்படம் கூட இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. உதாரணமாக மேற்கு மகாராஷ்டிரா, ஆந்திராவில் பிரம்மா, விஷ்ணு, சிவனின் தலை இணைந்து மூன்று தலைகளுடன், ஆறு கைகளுடன் அருளுகிறார்.

அதில் ஒரு ஜோடி கைகள் ஒவ்வொரு இறைவனுக்குரிய பொருட்களை கையில் வைத்திருக்கின்றார். அதாவது பிரம்மாவின் குறியீடாக ஜெப மாலை, விஷ்ணுவின் குறியீடாக சங்கு மற்றும் சக்கரம், சிவனின் குறியீடாக திரிசூலம் மற்றும் டமருகம் ஆகியவை ஆறு கைகளில் வைத்துள்ளார்.

Also Read: அடிக்கடி ரஜினி கிளம்பி போறாரே அந்த பாபாஜி குகைக்குள்ள என்னதான் இருக்கு... நீங்களே பாருங்க...

சந்நியாசி
இவரின் ரூபம் பெரும்பாலும் தனிமையில் வாழும் ஒரு சந்நியாசி அல்லது சாதுவாக வர்ணிக்கப்படுகின்றார். ஒரு காட்டில் தனிமையில் நிற்பது போன்றும், அவர் எல்லா உடைமைகளையும் விடுத்து, தியான யோகி வாழ்க்கையை தொடர்வதாக குறிக்கிறது.

இவரை குறிக்கும் வகையில் ஓவியங்கள், சில சிறு மற்றும் பெரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இதில் நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசுவால் சூழப்பட்டு நிற்கிறார். நான்கு நாய்கள் நான்கு வேதங்கள் அல்ல. ஆனால் அனைத்து உயிரினங்களிடையே அன்பு பாராட்டுதல், போதிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்