ஆப்நகரம்

சூரிய கிரகணம் 2019 முடியும் நேரம் (வீடியோ)

சூரிய கிரகணம் இன்று டிசமபர் 26 காலை 7.59க்கு தொடங்குகிறது. எந்த பகுதியில் எப்படி தெரிந்தது என்பதை பார்ப்போம்...

Samayam Tamil 26 Dec 2019, 11:42 am
வானில் நிகழும் மிக அரிய நிகழ்வான சூரிய கிரகணம் தமிழகத்தில் 90% இடங்களில் தெரிகிறது.
Samayam Tamil Solar eclipse1



சூரிய கிரகணம்:

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகின்றது.

தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்துள்ளது. நீலகிரியில் முழு சூரிய கிரகணம் காலை 9.26 மணிக்கு தெரிந்தது. மற்ற மாவட்டங்களில் சூரிய கிரகண நிகழ்வு தெரிந்து கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 90% சூரிய கிரகணம் தெரிவதால் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சூரிய கிரணத்தைப் பார்க்கக் கூடிய சூரிய கண்ணாடியைப் பயன்படுத்தி பார்த்து வருகின்றனர்.



பல்லேறு இடங்களில் மேக மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் அற்புத நிகழ்வை பார்க்க முடியவில்லை.



சூரிய கிரகணம் முடியும் நேரம்:
சூரிய கிரகணம் தமிழகத்தில் காலை 7.59மணிக்கு துவங்கி காலை 11.19 மணி வரை நீடிக்கின்றது.

சூரிய கிரகணம் நடக்கும் நேரம் வரை தண்ணீர் அருந்துதல், உணவு எடுத்துக் கொள்ளுதல் தவிர்ப்பது நல்லது.



சூரிய கிரகணம் காரணத்தால் கோயில் நடைகள் சாத்தப்பட்டு, பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்தது, கோயில் சுத்தம் செய்து பக்தர்களின் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்