ஆப்நகரம்

ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 03 - ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

மார்கழி மாதத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள். திருப்பாவையின் 30 பாடல்களிலும் திருமாலை மார்கழி மாதத்தில் எவ்வாறு வழிபட வேண்டும், பாவை நோன்பு எப்படி இருக்க வேண்டும், பாவை நோன்பு இருப்பதால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை தோழிகளுக்கு சொல்வது போது உலக உயிர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். பாவை நோன்பு பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைத்தது மட்டுமின்றி தானும் அந்த நோன்பினை கடைபிடித்து, திருமாலுடன் அவர் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 18 Dec 2023, 6:33 pm
திருமால் ஒருவரே ஆடவர் என்றும், இந்த உலக உயிர்கள் அனைத்தும் பெண்ணினத்தை சேர்ந்தவர்கள் என்றும், உலகத்தில் உள்ளவர்களின் நோக்கம், தனது நாயகனான திருவருளை அடைவது மட்டுமே என பொருள்படும் வகையில், 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் பாடி உள்ளார். அதனால் தான் சிறு வயது முதலே திருமாலையே தனது கணவனாக நினைத்து வளர்த்து, இறுதியில் அவரது திருவடிகளை சென்றடைந்ததாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil vishnu


மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை பொழுது என சொல்லப்படுவதால், இந்த சமயத்தில் தேவர்களின் தலைவனான மகா விஷ்ணுவை வழிபட்டால் திருமாலின் அருளை மட்டுமின்றி தேவர்களின் ஆசிகளையும் பெறலாம். திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்களும், ஆண்களும் பாவை நோன்பு இருந்தால் நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைந்து, விரைவில் திருமணம் கை கூடி வரும் என்பது ஐதீகம்.

2023 ஆம் ஆண்டு பண்டிகைகள், முக்கிய விசேஷ நாட்கள்

திருப்பாவை பாசுரம் 03 :

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

சாய்பாபாவின் மூன்றாவது அவதாரம் எங்கு, எப்போது நிகழ போகிறது?

பொருள் :

தனது திருவடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த உத்தமனின் நாமத்தை பாடி, எவ்வித பலனையும் எதிர்பாராமல் தினமும் நீராடி பாவை நோன்பு இருக்க வேண்டும். அவ்வாறு நோன்பு கடைபிடித்தால், கொஞ்சமும் குறைவில்லாமல் மாதமும் மூன்று முறை மழை பெய்து உலகம் செழிக்கும். அதில் வானத்தை தொடும் அளவிற்கு செந்நெல் கதிர்கள் ஓங்கி வளரும். அந்த வயல்வெளியில் மீன்கள் துள்ளி விளையாடும். பூத்துக்குலுங்கும் பூக்களில் அதிகப்படியான தேன் உண்டு, வண்டுகள் மயங்கி கிடக்கும்.

மாத சஷ்டி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்? விரத முறை என்ன?

செழிந்து வளர்ந்த புற்களை வயிறார உண்ட மகிழ்ச்சியில் பசுக் கூட்டங்கள், கைபிடித்து கரக்க முடியாத அளவிற்கு வள்ளலை போல் குடம் குடமாக பாலை சுரந்து, வீட்டிலும் வாழ்விலும் குறையாத செல்வம் நிறையும். ஆகையால் பெண்ணே பாவை நோன்பு நோற்க வருவாயாக.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்