ஆப்நகரம்

விநாயகர் மந்திரம் : சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரம்

விநாயகரை வணங்கி விட்டு எந்த காரியத்தை துவங்கினாலும் அது தடைகள் இல்லாமல் நடப்பதுடன், வெற்றியாக முடியும் என சொல்வார்கள். பிள்ளையார் சுழி போட்டு துவங்கும் காரியங்கள் அனைத்தையும் அவரே துணையாக இருந்து சுபமாக முடித்து கொடுப்பார் என்பது நம்பிக்கை, விநாயகர் தடைகள், துன்பங்கள், கிரக தோஷங்கள், கஷ்டங்களை தீர்க்கும் கடவுளாகவும், ஞானத்தை அருளக் கூடியவராகவும், நினைவாற்றலை பெருக வைக்கக் கூடியவராக விளங்குகிறார்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 23 Feb 2023, 11:39 am
சாலையோரத்திலும், குளக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கூட அமர்ந்து அருள் செய்வதால் விநாயகர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருந்து வருகிறார். விநாயகருக்கு சிதறு தேங்காய் விட்டால், நமது துன்பங்களும் சிதறி ஓடி விடும் என்பது நம்பிக்கை. இவர் கிரக தோஷங்களை நீக்கும் தெய்வமாக விளங்குகிறார். குழந்தைகளுக்கு பிரியமான தெய்வம் என்பதனாலும், பிள்ளை குணம் கொண்டவர் என்பதாலும் இவரை பிள்ளையார் என்று அழைப்பதாக சொல்லப்படுவதுண்டு.
Samayam Tamil vinayagar mantra powerful chaturthi mantra
விநாயகர் மந்திரம் : சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரம்


சதுர்த்தி விரதம் :

இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் எந்த காரியத்தை செய்தாலும் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர். மஞ்சள், சந்தனம், சாணம் என எந்த பொருளால், எந்த வடிவத்தில் பிடித்து வைத்து வழிபட்டாலும், அந்த பொருளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்யக் கூடிய எளிமையான தெய்வம் விநாயகர். இரண்டு அருகம்புல்லை கிள்ளி வைத்து, எளிமையாக அவல் சர்க்கரை மட்டும் வைத்து வழிபட்டால் கூட மனம் மகிழ்ந்து, அளவில்லாத நலன்களை தரக் கூடியவர் விநாயகர்.



கணபதி, விநாயகர், கணேசர் என எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படும் விநாயகப் பெருமானுக்குரிய விரதம் சதுர்த்தி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் கிருஷ்ணபட்ச நான்காம் நாளை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தினமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு, அன்றைய நாளை துவங்கினால், வாழ்வில் தடைகள் விலகி, நலங்கள் சேரும் என்பது நம்பிக்கை. அது முடியவில்லை என்றால் விநாயகருக்கு உரிய சதுர்த்தி திதியில் மட்டுமாவது அவரை வணங்க வேண்டியது சிறப்பு.

திருப்பதியில் ஸ்ரீவாணி டிக்கெட்களை மீண்டும் ஆஃப்லைனில் வழங்க திட்டம்

விநாயகரை வழிபடும் முறை :

விநாயகரை வழிபடும் போது அருகம்புல் சாற்றி, தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும் என்பது முறை. அதே போல் விநாயகரை 9 முறை வலம் வர வேண்டும் என்பதும் முறை. இந்த முறையில் விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும், தடைகளும், எதிர்ப்புக்களும் நம்மை விட்டு விலகிச் செல்லும். சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

விநாயகர் காயத்ரி மந்திரம் :

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்

காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் : துன்பங்கள் நீங்க தினமும் சொல்ல வேண்டிய பதிகம்

கணபதி மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

விநாயகர் சகஸ்ரநாமம் :

சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே

விநாயகர் அஷ்டாக்ஷர மந்திரம் : வெற்றிக்கான மந்திரம்

ஓம் கம் கணபதயே நம :

கணபதி திரியக்ஷரி மந்திரம் : செல்வ சேர

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

ஹரித்ரா கணபதி மந்திரம் : வீடு, நிலம் பெற

ஓம் ஹூம் கம் க்லெளம் ஹரித் ராகணபதயே
வர வரத ஸர்வஜனஹ்ருதயம் ஸ்தயம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

ஹேரம்ப கணபதி மந்திரம் : தடைகள் விலக

ஓம் கம் நம
ஓம் கூம் நம

உத்திரகாண்டில் கண்டிப்பாக செல்ல வேண்டிய டாப் 10 புண்ணிய தலங்கள்

லக்ஷ்மி கணபதி மந்திரம் : குழந்தை பாக்கியம் பெற

ஓம் நமோ லக்ஷ்மீகணேஷாய மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா

சக்தி கணபதி மந்திரம் - பயம் நீங்க

ஸ்ரீம் கணபதயே நம
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வஷூமானய ஸ்வாஹா
ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா

வக்ரதுண்ட மந்திரம் : பெரும் துயர்கள் விலக

வக்ரதுண்டாய ஹூம்

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்