ஆப்நகரம்

எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்கினால் வளமான வாழ்வை பெறலாம்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், அந்த நாளுக்குரிய தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும் வழிபட்டால் அதற்கான முழு பலனையும் நாம் பெற முடியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், அந்த நாளுக்குரிய தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும், கோவிலுக்கு சென்றும் வழிபட்டால் அதற்கான முழு பலனையும் பெற முடியும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 23 Nov 2022, 2:46 pm
இந்து நாள்காட்டியின் படி வாரத்தின் ஏழு நாட்களும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், அந்த நாளுக்குரிய தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும், கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தும் வழிபட்டால் அதற்கான முழு பலனையும் பெற முடியும்.
Samayam Tamil puja-f


அந்த குறிப்பிட்ட நாளில் அந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரம், 108 போற்றிகள், நாம ஜபம் போன்றவற்றை 108 என்ற எண்ணிக்கையில் செய்வது மிக அற்புதமான பலனையும் தரும். அப்படி எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால், வழிபாட்டிற்குரிய முழு பலனையும் பெற்று, வளமான வாழ்க்கையை பெற முடியும் என்பதை இங்கே பார்க்கலாம்.

அமாவாசையில் பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடத்துவது ஏன் ?

திங்கள் கிழமை - சோமவாரம் எனப்படும் வாரத்தின் முதல் நாள் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை இந்த நாளில் "ஓம் நமசிவாய "எனும் மந்திரம் கொண்டோ அல்லது மஹா மிருத்யுஞ்செய ஸ்தோத்திரத்தை சொல்லியோ வணங்கலாம்.

செவ்வாய்கிழமை - இது அனுமனுக்கான தினமாக கருதப்படுகிறது. மஹாராஷ்ட்ரா போன்ற வடஇந்திய பகுதிகளில் செவ்வாய் கிழமை விநாயகருக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. விநாயகரை மங்கள் கர்தா என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் 40 பத்திகளை கொண்ட அனுமன் சலிசா எனும் அனுமன் மந்திரத்தை சொல்லலாம். மற்றும் விநாயகரை வழிபடுவோர், அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம்.

சபரிமலை ஐயப்பனிடம் குறையை சொல்ல இப்படி ஒரு வழியா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே

புதன் கிழமை - புதுவாரம் எனப்படும் இந்நாள் கிருஷ்ணருக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் துளசி இலைகளை கிருஷ்ணருக்கு அர்பணித்து ஹரே கிருஷ்ண பஜனைகளை மேற்கொள்ளலாம்.

வியாழக்கிழமை - ஒரு சிலர், இதனை பாபாவிற்கான நாளாகவும், கந்தனுக்கு உகந்த நாளாகவும் கருதுகின்றனர். சில இடங்களில் அனுமரை வணங்குவதும் உண்டு.

வெள்ளிக்கிழமை - வாரத்தின் ஏழு நாட்களில் மிக மங்களமான நாள். இந்நாள் லட்சுமி தேவிக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. செல்வ வளம், செளபாக்கியம் ஆகியவற்றின் அம்சமாகவும் திகழ்கிறது. நல்ல காரியங்களை வெள்ளிக்கிழமைகளில் துவங்குவதை மிக நல்ல சகுனமாகவும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தை பிறப்பது மிக சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் அம்பிகை அல்லது சக்தி வழிபாடும் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில், (திருவைகுந்த விண்ணகரம்) திருநாங்கூர், மயிலாடுதுறை - 108 திவ்ய தேசங்களில் 33 வது கோவில்

சனிக்கிழமை - சனிபகவானுக்கு அர்பணிக்கப்பட்ட தினமாகும். இந்த நாள் அனுமனையும், விஷ்ணுவையும் வணங்க உகந்த தினமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் பரிகாரமாக நவகோள்களை வணங்கும் தினமாக இந்த நாள் கருதப்படுகிறது.

ஞாயிற்றுகிழமை - சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் பைரவரை வணங்கி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்