ஆப்நகரம்

முத்துமாரியம்மனுக்கு கரண்சி நோட்டுகளால் அலங்காரம்!

கோவை மாவட்டம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு கரண்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Samayam Tamil 14 Apr 2018, 4:52 pm
கோவை மாவட்டம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு கரண்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
Samayam Tamil முத்துமாரியம்மனுக்கு கரண்சி நோட்டுகளால் அலங்காரம்!
முத்துமாரியம்மனுக்கு கரண்சி நோட்டுகளால் அலங்காரம்!

தமிழ் புத்தாண்டு திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் இன்று தமிழ் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, கோவை மாவட்டம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலைக்கு கரண்சி நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான 2000, 500, மற்றும் 200 கரண்சி ரூபாய் நோட்டுகளை கொண்டும், ஒரு கோடி மதிப்பிலான வைர மற்றும் முத்து நகைகளை வைத்தும் இந்த அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மன் சிலையின் கரண்சி நோட்டுகள் அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்