ஆப்நகரம்

நவராத்திரி ஸ்பெஷல்: ஒன்பது நாளும்... பெருமாளுக்கு அலங்காரம்!

நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரைப் போற்றி, அலங்கரித்து வழிபடுவது வழக்கம். சிவாலயங்களிலும், சக்தித் திருத்தலங்களிலும் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து வழிபடுவது போல், வைணவத் திருத்தலங்களிலும் நவராத்திரி விழா கொண்டாடுவர்.

TOI Contributor 1 Oct 2016, 4:53 pm
நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரைப் போற்றி, அலங்கரித்து வழிபடுவது வழக்கம். சிவாலயங்களிலும், சக்தித் திருத்தலங்களிலும் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து வழிபடுவது போல், வைணவத் திருத்தலங்களிலும் நவராத்திரி விழா கொண்டாடுவர்.
Samayam Tamil navratri perumal alangaram
நவராத்திரி ஸ்பெஷல்: ஒன்பது நாளும்... பெருமாளுக்கு அலங்காரம்!

இந்த நாட்களில், தாயாருக்கு வழக்கம்போல் மலர் அலங்காரம் மட்டும் செய்வர். ஆனால், ஒன்பது நாட்களும் ஒன்பது விதமாக பெருமாளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

தாயாருக்கு விதவிதமாக அலங்காரம் செய்யாமல், பெருமாளுக்கு அலங்காரம் செய்வது ஏன்? அதற்குக் காரணம், மகாவிஷ்ணு தன் மார்பில் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்யும்படி இடம் அளித்திருக்கிறார்.

தாயார் இல்லாமல் பெருமாள் இல்லை. பெருமாள்- தாயார் ஐக்கிய தத்துவத்தில், தாயார் என்றும் சர்வ அலங்கார தேவியாக அவர் இதயத்தில் குடிகொண்டிருக்கிறாள். அதனால், தாயாருக்குத் தனியாக அலங்காரம் செய்து அழகு பார்ப்பதைவிட, பெருமாளுக்கு அலங்காரம் செய்வித்தால், அது தாயாருக்கும் அலங்காரம் செய்வதற்குச் சமமாகும் என்பது ஐதீகம்!

எனவே, நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பெருமாளை ஒன்பது வித அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்