ஆப்நகரம்

பழநி பெரியநாயகி கோயிலில் லட்சார்ச்சனை வேள்வி!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழநி திருத்தலம். இந்தக் கோயிலுக்கு உபகோயிலாக அமைந்த ஆலயமாக பெரியநாயகி அம்மன் திகழ்கிறது.

TOI Contributor 11 Aug 2016, 5:24 pm
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழநி திருத்தலம். இந்தக் கோயிலுக்கு உபகோயிலாக அமைந்த ஆலயமாக பெரியநாயகி அம்மன் திகழ்கிறது.
Samayam Tamil pazhani periyanayaki temple
பழநி பெரியநாயகி கோயிலில் லட்சார்ச்சனை வேள்வி!


இந்த ஆலயத்தில், கடந்த மாதம் 16ம் தேதியில் இருந்து துவங்கியது ஆடி லட்சார்ச்சனை பெருவிழா. தினமும் அருள்மிகு பெரியநாயகியம்மனுக்கு நூறாயிரம் மலர்கள் தூவி லட்சார்ச்சனை நடைபெற்றது. அதேபோல், ஆடி வெள்ளி தோறும் பெரியநாயகியம்மனுக்கு முத்தங்கி அலங்காரச் சேவையும் சந்தனக்காப்பு அலங்காரம், மீனாட்சி அலங்காரம் ஆகியன செய்யப்பட்டன.

லட்சார்ச்சனை நிறைவு அடைந்ததும் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நேற்று நடைபெற்றது. அம்மன் சன்னதிக்கு முன் யாககுண்டம் அமைக்கப்பட்டு பிரதான கலசம் மற்றும் 108 கலசங்கள் வைக்கப்பட்டு யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக விநாயகர் அனுக்ஞை, புண்யாவாகனம், பஞ்ச கவ்ய பூஜைகள் நடைபெற்றன. சுமங்கலி பூஜை, கன்யாபூஜை, வடுகபூஜையை தொடர்ந்து புரஸ்சரணஹோமம், அஷ்டோத்திர ஹோமம், தர்ப்பணம், த்ரவியாஹூதி நடைபெற்ற பின் வசூர்தாரா மூலம் ஹோமம் முதலானவை வளர்க்கப்பட்டன. பிறகு, பூர்ணாஹூதி நடைபெற்றது. வளையல், கண்ணாடி, சீப்பு, வஸ்திரம் ஆகியன வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின் 108 சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்பட்டன.

பிறகு, கலசங்களில் இருந்த புனிதநீர் கொண்டு, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சோடஷ அபிஷேகம், சோடஷ உபசாரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நாளை வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு, மகா அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும் என சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதையடுத்து நாளை இரவு வெள்ளித் தேரோட்டத்தில் அம்பாள் பவனி வரும் வைபவம் நடைபெறும்.

அதேபோல் கோயிலில் உள்ள ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் ஆடிசுவாதியையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை விமரிசையாக நடைபெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்