ஆப்நகரம்

ஸ்ரீ அனுமன் காயத்ரி மந்திரம்: ஆஞ்சநேயர் மூல மந்திரம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்: அனுமன் நம் உடல் வலிமையோடு, மன வலிமையை அதிகரித்து, நம் இன்னல்களிலிருந்து நாமே வெளிவர நல்வழி காட்டுவார். அவருக்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வர சகல நன்மைகள் உண்டாகும்.

Samayam Tamil 12 Jan 2021, 12:32 pm
ராம பக்தனான அனுமனுக்கு வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன், கேசரி மைந்தன், ஆஞ்சநேயர், மாருதி, சுந்தரன், சொல்லின் செல்வன் என பல்வேறு பெயர்கள் உள்ளன. அவை அனைத்தும் அவரின் பெருமைகளை உணர்த்தும் விதமாக உள்ளது.
Samayam Tamil Hanuman Gayatri Mantra


வாலியிடமிருந்து சுக்கிரவனை காத்தவர். ராமனுக்காக கடலைக் கடந்து சீதா தேவியை தேடி கண்டுபிடித்தவர்.

  • அனுமன் ஜெயந்தி 2021 எப்போது? - நெஞ்சை பிளந்து சீதா ராமன் இருப்பதை காட்டிய ஆஞ்சநேயர் புராண கதை

சீதா தேவியை ராமனுடன் சேர்த்து வைப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவர். ஸ்ரீ ராமா என்று சொன்னாலே ஓடோடி வந்து நமக்கு வேண்டிய உதவிகள் செய்பவர். பிரச்சினைகளைத் தீர்ப்பவர்.
இப்படிப்பட்ட ராம பக்த அனுமனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை நாம் உள்ளம் உருக கூறி வர நம் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, நம் இன்னல்கள் நீக்கி அருள்வார்.

  • பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்: கிரக தோஷங்கள், பீடைகள் கெட்ட கனவுகள் நீங்க படிக்க வேண்டிய
ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

அனுமனின் மந்திரம் தினமும் உச்சரிப்பதால் நமக்கு தனிப்பட்ட வகையில் நல்ல பலன் உண்டாவதோடு, குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே நல்ல அன்னியோன்னியமும், குடும்ப முன்னேற்றமும் உண்டாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்