ஆப்நகரம்

புதன், கேது பரிகாரத் தலங்கள்!

பூம்புகாருக்கு அருகில் புதன் பரிகாரத் தலமும் கேது பரிகாரத் தலமும் அமைந்து உள்ளது. ஒரே நாளில் இந்த இரண்டு தலங்களுக்கும் சென்று வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

TOI Contributor 25 Jul 2016, 2:48 pm
பூம்புகாருக்கு அருகில் புதன் பரிகாரத் தலமும் கேது பரிகாரத் தலமும் அமைந்து உள்ளது. ஒரே நாளில் இந்த இரண்டு தலங்களுக்கும் சென்று வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.
Samayam Tamil puthan kethu navagiraha temples
புதன், கேது பரிகாரத் தலங்கள்!


நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருவெண்காட்டில் புதன் ஸ்தலம் உள்ளது. இங்கே உள்ள சிவனாரின் ஆலயத்தில், அகோர மூர்த்திக்கு தனிச்சந்நிதி அமைந்து உள்ளது. இங்கு வந்து அகோரமூர்த்தியை தரிசிக்க, புதன் கிரகத்தால் உண்டான சகல தோஷங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது ஐதீகம்!

திருவெண்காட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கேது பகவானுக்கு உரிய தலமான கீழப்பெரும் பள்ளம். இங்கே உள்ள சிவாலயம், கேது பரிகாரத் திருத்தலம் என்று போற்றப்படுகிறது.

இங்கு வந்து வழிபட, கேது தோஷங்கள் விலகும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்