ஆப்நகரம்

திருப்பதி பாலாஜியைப் போல பிரமாண்ட அலங்காரத்தில் காட்சி தரும் அத்தி வரதர் !

அத்தி வரதர் 43வது தின வைபவத்தில் வரதர் திருப்பதியைப் போல அலங்காரம் செய்யப்பட்டு அசத்தலாக காட்சி தருகின்றார்.

Samayam Tamil 13 Aug 2019, 12:58 pm

நித்தமும் பக்தர்களுக்கு அருள்பவர் பெருமாள். அதே போல் நித்தமும் புதிய அலங்காரத்தில், தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு தன் அருட்கடாட்சத்தால் அருள் பொழிபவர் நம் அத்தி வரதர்.
Samayam Tamil athi varadar day 43 a


ஜூலை 1ம் தேதியிலிருந்து காட்சி தர தொடங்கிய நம் அத்தி வரதர், முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி தான், இந்தாண்டு அத்தி வரதர் வைபவத்தில் கடைசியாக பார்க்க முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று அத்தி வரதரை தரிசிக்கும் கடைசி வார இறுதி நாள் என்பதால் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.

அத்தி வரதர் தரிசன ஆன்லைன் டிக்கெட் இனி முன் பதிவு செய்ய முடியாது!

இன்றைய அலங்காரம்:
தினமும் புது பட்டு வஸ்திரம் உடுத்தியும், புது அலங்காரத்தால் பக்தர்களுக்கு அருளி வரும் அத்தி வரதர், இன்று திருப்பதி பாலாஜியைப் போல அசத்தலாக பிரமாண்ட அலங்காரத்தோடு காட்சி தருகிறார். அதே சமயம் திருப்பதியைப் போல தங்க நகைகளை அணியாமல் நகைகளுக்குப் பதிலாக மலர்கள் சூடி, பட்டு வஸ்திரங்கள் மட்டுமே உடுத்தி அத்தி வரதர் மிக சிறப்பாக காட்சி தருகின்றார்.

நாள் 44: பஞ்சை மற்றும் சிவப்பு நிற காஞ்சி பட்டுடன் ராஜ அலங்காரத்தில் அத்தி வரதர்




திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்... அவ்வளவு கூட்டம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்