ஆப்நகரம்

அத்தி வரதர் தரிசனம் நீட்டிப்பு இல்லை- உயர் நீதிமன்றம்

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க கூறி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

Samayam Tamil 14 Aug 2019, 4:02 pm

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
Samayam Tamil athi varadar 39 (2)


அத்தி வரதர் வைபவம் வரும் 17ம் தேதி முடிய உள்ள நிலையில், 16ம் தேதி வரை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அத்தி வரதர் வைபவம் மேலும் நீட்டிக்க வேண்டும் என சர்வதேச வைஸ்னவ ராமானுஜ ராஜ்ய சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

அத்தி வரதர் தரிசன நன்கொடை டிக்கெட் : பக்தர்கள் ஏமாற வேண்டாம்


நீதிமன்றம் உத்தரவு:
இந்த வழக்கு குறித்து இந்து அறநிலைய துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், “ஏற்கனவே அத்தி வரதர் தரிசனம் இத்தனை நாட்கள் தான் நடக்கும். அதற்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதுவரை இவ்வளவு எளிமையாக அத்தி வரதரை பார்த்திருக்க முடியாது!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதி கேசவலு, “அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றம் எடுக்க முடியாது. மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி கூறினார். அதோடு பொதுநல வழக்காக இருந்தால் மீண்டும் தாக்கல் செய்யுங்கள். முந்தைய வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்