ஆப்நகரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்கத்திலான வில்வ இலை மாலை காணிக்கை

பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் தங்கத்தில் 3 லட்சம் செலவிலான வில்வ இலை மாலையை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காணிக்கையாக அளித்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2019, 3:14 pm
நடராஜர் சன்னதியின் வலப்புறம் சிதம்பர ரகசியம் உள்ளது. சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் காணும் வகையில் தங்கத்திலான வில்வ மாலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.
Samayam Tamil Thillai Nataraja Temple 1


பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் 3 லட்சம் செலவிலான இரண்டடி உயரமுள்ள வில்வ இலை மாலையை நடராஜர் கோவிலுக்கு காணிக்கையாக அளித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னதிக்கு வலது புறம் சிதம்பர ரகசியம் உள்ளது. சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் காணும் வகையில் தங்கத்திலான வில்வ மாலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் பக்தர்கள் சிதம்பர ரகசியத்தை தரிசனம் செய்யும்பொழுது, அவர்கள் வேண்டிக் கொள்ளும் காரியங்கள் வெற்றி பெறும் பொழுது சிதம்பர ரகசியத்திற்கு தங்கத்திலான வில்வ மாலையை காணிக்கையாக செலுத்துகின்றனர்.


அதன்படி ஆனி திருமஞ்சன திருவிழா நடந்து வரும் இவ்வேளையில் பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் ரூபாய் 3 லட்சம் செலவில் இரண்டடி உயரமுள்ள வில்வ மாலையை நடராஜர் கோவிலுக்கு அளித்து உள்ளார். இந்த வில்வ மாலையை நடராஜர் கோவில் முன்னாள் பொது தீட்சிதர்கள் செயலாளர் பாஸ்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் நடராஜர் சன்னிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பின்பு சிதம்பர ரகசியத்தில் அணிவித்தனர். இதை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கண்டு தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்