ஆப்நகரம்

இன்று அத்தி வரதரை தரிசிக்க வர வேண்டாம்: கோயில் நிர்வாகம்

அத்தி வரதர் 28வது நாளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். அவரை தரிசிக்க இன்று வெளியூர் பக்தர்கள் வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Samayam Tamil 28 Jul 2019, 2:58 pm
அத்தி வரதரை தரிசிக்க இன்று வெளியூர் பக்தர்கள் வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Samayam Tamil Athi varadar Rasi


ஒரு சில நிகழ்வுகள் ஓரிரு நாட்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கும், ஆனால் காஞ்சிபுரம் அத்தி வரத பெருமாள் இந்த மாதம் முழுவதும் ட்ரெண்டில் உள்ளார்.

2 லட்சம் பக்தர்கள்:
பொதுவாக வார நாட்களில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க குவிவது வழக்கம். அதே போல் வார விடுமுறை நாட்களில் அதை விட அதிக கூட்டம் வருவது வழக்கம்.

திருப்பதியை விட அதிக பக்தர்கள் தரிசிக்கப்பட்ட அத்தி வரதர் பெருமாள்!

இந்நிலையில் ஞாயிறு கிழமை விடுமுறை தினமான இன்று, அத்தி வரதரை தரிசிக்க சுமார் 2 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் நிலவுகிறது.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

அதன் காரணமாக அத்தி வரதரை தரிசிக்க இன்று வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக திருப்பதி பெருமாளை தரிசிக்க செல்லும் சராசரி பக்தர்களின் கூட்டத்தை விட அத்தி வரதரை வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 நாட்களை விட இன்று கூட்டம் அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் கூட்டம் இது வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்