ஆப்நகரம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு 3 டன் மலர்களால் புஷ்ப யாகம்!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 8 Jul 2019, 8:39 pm
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகத்தையொட்டி நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது. இதில் உற்சவமூர்த்தி சேனாதிபதி நான்கு மாடவீதியில் பவனிவந்தார். அதைதொடர்ந்து சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு யாகம் நடந்தது. புஷ்ப யாகத்தையொட்டி, இன்றுகாலை உற்சவமூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு திருமஞ்சனம் நடந்தது.
Samayam Tamil Pushpa yagam


இதையடுத்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து கூடையில் வைக்கப்பட்ட மலர்கள் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் அதிகாரிகள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை துளசி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மருவம், தாழம்பூ உள்ளிட்ட 12ரகமான 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்