ஆப்நகரம்

ஆடி அமாவாசை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

ஆடி அமாவாசை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Jul 2019, 10:41 am
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்கான விஷேச நாளாகும். இந்த நாளில் நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க ஒவ்வொரு ஆண்டும் மக்கள் குவிவது வழக்கம்.
Samayam Tamil special train


அப்படிப் பட்ட முக்கிய நாளில் இராமேஸ்வரத்தில் மக்கள் மிக அதிகமாக குவிந்து முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க செல்வது உண்டு.

அந்த வகையில் வரும் புதன் கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதியை விட அதிக பக்தர்கள் தரிசிக்கப்பட்ட அத்தி வரதர் பெருமாள்!: எத்தனை லட்சம் தெரியுமா?

மதுரை-ராமேஸ்வரம் இடையே 31ஆம் தேதி காலை 8:30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும்,
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம்-மதுரை இடையே 31ஆம் தேதி மாலை 4:15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்