ஆப்நகரம்

சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

TOI Contributor 14 Sep 2016, 5:15 pm
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
Samayam Tamil sabari mala temple opened for onam festival
சபரிமலை நடை திறப்பு!

இந்த வருடம் கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்தார். 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஓணம் சிறப்பு பூஜையும், 16-ம் தேதி முதல் 21ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜையும் நடைபெறுகிறது.

இந்த நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை முதலான அனைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 13ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்