ஆப்நகரம்

ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை கோவில் நடை திறப்பு!

ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

Samayam Tamil 17 Jul 2018, 12:21 pm
ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
Samayam Tamil Sabarimala-Ayyappa-Temple-Opening-Days-2015-2016-Calendar
ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை கோவில் நடை திறப்பு!


சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நாட்களை போல தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இந்த நிலையில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். பின்னர் கோவில் கருவறை மற்றும் சன்னிதான பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை அதிகாலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. இந்த 5 நாட்களிலும் நெய் அபிஷேகம் நடைபெறும். 21ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும்.

பின்னர் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் அடுத்த மாதம் 14-ம் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படுகிறது. இதனிடையே தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அய்யப்ப பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்