ஆப்நகரம்

சபரிமலை கோவிலின் பெயரை மாற்ற தேவஸ்தானம் பரிசீலனை

சபரிமலை ஐய்யப்ப சாமி கோவிலின் பெயரை மாற்றப்போவதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.

TNN 3 Jan 2018, 2:26 pm
சபரிமலை ஐய்யப்ப சாமி கோவிலின் பெயரை மாற்றப்போவதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.
Samayam Tamil sabarimala temple likely to be renamed
சபரிமலை கோவிலின் பெயரை மாற்ற தேவஸ்தானம் பரிசீலனை


’சபரிமலை ஐய்யப்பன்’ கோவிலியின் பெயரை, ’சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா’ என்று மாற்ற உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. இதனால் சபரிமைலை கோவில் மீண்டும் தனது பழைய பெயரிலே அழைக்கப்படும் .
காங்கிரஸ் கட்சியின் பிரயார் கோபாலகிருஷ்ணன் ஆட்சியின் போதுதான் சபரிமலை ஐய்யப்ப சாமி கோவில் என்று மாற்றப்பட்டது.

தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் பழைய பெயரை அமல்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பெயர் மாற்றத்தை சுற்றுலாத் துறை மற்றும் தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் வரவேற்றுள்ளார். அது தொடர்பாக அவர் கூறியிப்பதாவது ‘ கோவில் தொடர்பான பத்திரங்களில் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டதாகவும் . பெயர் மாற்று விவகாரத்தை அரசு அதிகமாக வெளிபடுத்த விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சபரிமலை ஐய்யப்ப சாமி என்று பெயர் இருப்பதால்தான் பெண்கள் அனுபதிக்க முடியாது என்றும் அதேபோல் பெயர் மாற்றப்பட்டால் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் பெயர் மாற்றத்திற்கும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கும் எந்த சமந்தமும் இல்லை என்று தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். சபரிமலை ஐய்யப்ப சாமி கோவிலின் பெயரை மாற்றப்போவதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்