ஆப்நகரம்

மாசி மாத பூஜைக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது.

Samayam Tamil 11 Feb 2018, 11:25 am
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது.
Samayam Tamil sabarimala temple to be open tomorrow for maasi madham pooja
மாசி மாத பூஜைக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு!


ஒவ்வொரு தமிழ்மாதமும் 5 நாட்கள் சபரிமலைக் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடப்பது வழக்கம். அது போல தமிழ் மாதமான மாசி மாத பூஜைகள் நாளை தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதை ஒட்டி சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5.30 க்கு திறக்கப்படுகிறது. நாளை நடை திறந்ததும் கோயிலின் மேல்சாந்தி உன்னி கிருஷ்ண நம்பூதிரி தீபாரதனை நடத்துவார். அதைத் தொடர்ந்து நாளை இரவு 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு நடை திறந்திருக்கும். வரும் பிப்ரவரி 13 முதல் தினமும் காலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் அடுத்த மாதம் திறக்கப்படும்.

மாசி மாத பூஜையை முன்னிட்டு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்