ஆப்நகரம்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா.!

சனிப்பெயர்ச்சி விழா இன்று நிகழ இருப்பதை முன்னிட்டு, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரபகவான் கோவிலில், பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

TNN 19 Dec 2017, 9:58 am
சனிப்பெயர்ச்சி விழா இன்று நிகழ இருப்பதை முன்னிட்டு, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரபகவான் கோவிலில், பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Samayam Tamil sani peyarchi festival in thirunallaru
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா.!


உலகிலேயே சனி பகவானுக்கு என தனி சன்னதி, திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகும்போது சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் அதிவிமரிசையாக கொண்டாடப்படும்.

அந்தவகையில் இன்று, காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தேவஸ்தான நிர்வாகம் சார்பிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்