ஆப்நகரம்

இன்று சனிப் பிரதோஷம் சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு!

இன்று சனிக்கிழமை. பிரதோஷ தினம். எனவே இதை மகா பிரதோஷம் என்பார்கள். இந்த நாளில் அதாவது சனி மகா பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.

TOI Contributor 2 Jul 2016, 3:10 pm
இன்று சனிக்கிழமை. பிரதோஷ தினம். எனவே இதை மகா பிரதோஷம் என்பார்கள். இந்த நாளில் அதாவது சனி மகா பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.
Samayam Tamil sani pradhosam sivaalayam
இன்று சனிப் பிரதோஷம் சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு!


சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் எனும் சொலவடை உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாபங்களும் விலகும். புண்ணியங்களும் அதன் பலாபலன்களும் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

ஆகவே, இந்த நாளில், மாலை வேளையில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் அமர்க்களப்படும். இதற்கான ஏற்பாடுகளை காலையில் இருந்தே செய்யத் துவங்கி விடுவார்கள் அர்ச்சகர்கள்.

நந்திதேவருக்கு குடம்குடமாக, பாலபிஷேகம் நடைபெறும். பிறகு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சகல பூக்களை அணிந்து கொண்டு, அழகுறக் காட்சி தருவார் ஸ்ரீநந்திதேவர்.

வழக்கமான பிரதோஷ தினத்தை விட, இன்று அனைத்து சிவாலயங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்வார்கள்.

வருடத்துக்கு மூன்று சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்தே வரும். இன்றைய தினம், சனிப் பிரதோஷமாக அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நாளில், மாலையில் சிவ பூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பது, வளம் சேர்க்கும். சந்ததியை சிறக்கச் செய்யும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்