ஆப்நகரம்

சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்!

இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, அனைத்து ஆலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரப் பிறப்பின் முதல் சங்கட ஹர சதுர்த்தி என்பதால், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாக நடைபெற்றன.

TOI Contributor 25 Apr 2016, 3:53 pm
இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, அனைத்து ஆலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரப் பிறப்பின் முதல் சங்கட ஹர சதுர்த்தி என்பதால், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாக நடைபெற்றன.
Samayam Tamil sankatakara chathurthi
சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்!

இன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகருக்கு உகந்த அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் சங்கட ஹர சதுர்த்தி அமைவது கூடுதல் விசேஷம் என்பார்கள். இந்த நிலையில், சித்திரைப் பிறப்பின் முதல் சங்கட ஹர சதுர்த்தி என்பதால், இன்று காலையும் மாலையும் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
காலையில் அவரின் திருமேனிக்க்கு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது. திருச்சி உச்சிப்பிள்ளையார், சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பிள்ளையார், சிதம்ப்ரம் அருகில் உள்ள திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார், காரைக்குடி அருகில் உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், காரைக்குடி கோட்டையூரில் உள்ள ஸ்ரீசொற்கேட்ட விநாயகர் ஆகியோருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் வழிபாடுகளும் மாலையில் நடைபெறுகின்றன.
இந்த விழாவில் கலந்து கொண்டு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தினாலோ, வஸ்திரம் சார்த்தி வழிபட்டாலோ, சர்க்கரைப் பொங்கல் அல்லது சுண்டல் அல்லது கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபட்டாலோ வாழ்வில் உள்ள தடைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்