ஆப்நகரம்

நாளை பள்ளிகள் திறப்பு... விநாயகர் கோயிலில் வழிபாடு!

தமிழகத்தின் பல ஆலயங்களில் நாளை 1ம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல விநாயகர் ஆலயங்களில் வழிபட்டார்கள் பக்தர்கள்.

TOI Contributor 31 May 2016, 6:56 pm
தமிழகத்தின் பல ஆலயங்களில் நாளை 1ம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல விநாயகர் ஆலயங்களில் வழிபட்டார்கள் பக்தர்கள்.
Samayam Tamil school reopening tomorrow devotees will pray in vinayagar temple
நாளை பள்ளிகள் திறப்பு... விநாயகர் கோயிலில் வழிபாடு!


திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் மலையடிவாரத்தில் ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளது. பொதுவாகவே கடைவீதிகள் கொண்ட மலைவாசல் பகுதியில் வியாபாரிகள், தினமும் மாணிக்கவிநாயகரை தரிசித்து விட்டு, அவருக்கு அருகம்புல் மாலை சார்த்திவிட்டு கடையைத் திறப்பார்கள்.

அதேபோல் இந்தப் பகுதியில் உள்ள மாணவர்களும் தினமும் இங்கு வந்து மாணிக்க விநாயகரைத் தரிசித்துவிட்டு பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

நாளை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறப்பதையொட்டி, இன்று மாணவர்கள் வந்து மாணிக்கவிநாயகரைத் தரிசித்தார்கள். இதையொட்டி விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன.

இதேபோல், தஞ்சை கரந்தையில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காரைக்குடி கோட்டையூரில் உள்ள சொற்கேட்ட விநாயகருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கும்பகோணம் மெயின் பஜார் பகுதியில் உச்சிப் பிள்ளையார் கோயிலில், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினார்கள் பக்தர்கள்.

திருவாரூர் தியாகேசர் கோயிலுக்கு எதிரில், கமலாலயக் குளக்கரையில் உள்ள காட்சி கொடுத்த கணபதிக்கு விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்