ஆப்நகரம்

முருகன் சன்னதியை சுற்றி நின்ற பாம்பு:பக்தர்கள் பரவசம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பர ஈஸ்வர கோவிலில் உள்ள முருகன் சன்னதியின் கதவில் பாம்பு ஒன்று சுற்றி நின்ற காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் சென்றனர்.

TNN 19 Nov 2016, 11:56 am
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பர ஈஸ்வர கோவிலில் உள்ள முருகன் சன்னதியின் கதவில் பாம்பு ஒன்று சுற்றி நின்ற காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் சென்றனர்.
Samayam Tamil snake protects murugan shrine in thiruvannamalai temple
முருகன் சன்னதியை சுற்றி நின்ற பாம்பு:பக்தர்கள் பரவசம்..!


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இக்கோவிலில் மூலவர் ஏகாம்பர ஈஸ்வரர் தவிர விநாயகருக்கும்,முருகனுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் நேற்று கோவிலைத் திறந்த பூசாரி,ஒவ்வொரு சன்னதியாக சென்று பூஜைகள் நடத்திக் கொண்டிருந்தார்.முருகன் சன்னதியை திறக்க வந்தபோது,சன்னதியின் கதவில் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டு இருப்பதை பூசாரி பார்த்துள்ளார்.அவர் எவ்வளவோ முயற்சித்தும் பாம்பு அந்த கதவை விட்டு இறங்கவில்லை.இந்நிலையில் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்,இந்த காட்சியை பார்த்து பரவசமடைந்தனர்.முருகன் சன்னதிக்கு பூஜை நடத்த வேண்டும் என்பதால்,வேறு வழியின்றி பக்தர்கள் சிலர் பாம்பை பிடித்து கோயிலுக்கு வெளியே விட்டனர்.

முருகன் சன்னதியை பாம்பு பாதுகாத்து வருவதாக கூறி இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் மற்றவர்களிடம் பரவசத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Snake protects Murugan shrine in Thiruvannamalai Temple

அடுத்த செய்தி

டிரெண்டிங்