ஆப்நகரம்

ஆன்மிக கதைகள்: அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே!!

நாம் அனைவருக்குமே ஆசை என்பது இருக்கும். ஆனால், அந்த ஆசைக்கு வரைமுறை. அளவுக்கு அதிகமாக பேராசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடக் கூடாது. இதற்கு சான்று தான் இந்த கதை!!

TNN 26 Jan 2017, 10:25 pm
நாம் அனைவருக்குமே ஆசை என்பது இருக்கும். ஆனால், அந்த ஆசைக்கு வரைமுறை. அளவுக்கு அதிகமாக பேராசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடக் கூடாது. இதற்கு சான்று தான் இந்த கதை!!
Samayam Tamil spiritual story the desire should have a protocol
ஆன்மிக கதைகள்: அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே!!


காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,'' என்றது. அவனும் ஆவலுடன் வீட்டிற்கு ஓடினான், சொன்னது போலவே தங்கத்தையும் பார்த்தான். ஆனால், ஆறு கலயங்களில் முழுமையாகவும், ஒன்றில் மட்டும் பாதியும் இருந்தது. இதனை எடுத்துச் செலவழிக்காமல் என்ன இந்த கலையும் மட்டும் பாதியாக இருக்கிறது என்று எண்ணி அதனை நிரப்ப வேண்டும். தன்னிடம் மட்டுமே ஏழு கலயம் அளவிற்கு தங்கம் இருக்க வேண்டும் என நினைத்தான். பேராசை வந்தது அவனுக்கு.

உடனே, மனைவி, பெண் குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை வாங்கி கலயத்தில் போட்டான். அது நிரம்பவில்லை. அப்படியே இருந்தது. குடும்பத்தை பட்டினி போட்டு, வாங்குகிற சம்பளத்திற்கெல்லாம் தங்கத்தை வாங்கி உள்ளே போட்டான். மாற்றமில்லை. கடைசியாக மனநிம்மதியை இழந்தான். அவனும், குடும்பத்தாரும் பட்டினி கிடந்ததில் நோய்வாய்ப்பட்டனர். பூதத்தை மனதில் நினைத்தான். அந்த பூதம் அவன் முன் தோன்றியது.

இப்படி ஆகி விட்டதே என் நிலை! என்று வருத்தமுற்றான் அந்த இளைஞன். அதற்கு அனந்த பூதம், இளைஞனே! பேராசையில்லாதவர்களுக்கே இது பயன்படும். இதைக் கொண்டு நீயும் உன்னை வளப்படுத்தி, பிறருக்கும் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஏழு கலயமும் பதினான்காக மாறியிருக்கும். நீயோ ஆசையில் இருப்பதையும் இழக்கப் போகிறாய். இதை எடுத்துப் போய், பேராசையற்ற இன்னொருவனிடம் கொடுக்கப் போகிறேன்,'' என்று சொல்லி மறைந்து விட்டது.

கலயங்களும் மறைந்தன. அந்த இளைஞன் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தான். ஆசை அளவுடனே இருக்க வேண்டும். பேராசை ஆகிவிட்டால், இருப்பதையும் இழந்து விடுவோம் புரிகிறதா நண்பர்களே!!
Spiritual story: The desire should have a protocol

அடுத்த செய்தி

டிரெண்டிங்