ஆப்நகரம்

எதிரிகளை விரட்டும் ஸ்ரீவராஹி தேவிக்கு பூஜை!

சப்த கன்னியரில் ஒருத்தியான வராஹி தேவியின் சந்நிதிக்கு தஞ்சைபெரிய கோயிலில் சந்நிதி உள்ளது. பஞ்சமி நாளான நேற்று மாலை முதல் இரவு வரை ஸ்ரீவராஹி தேவிக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி வழிபாடு செய்தார்கள்.

TOI Contributor 27 Apr 2016, 1:12 pm
சப்த கன்னியரில் ஒருத்தியான வராஹி தேவியின் சந்நிதிக்கு தஞ்சைபெரிய கோயிலில் சந்நிதி உள்ளது. பஞ்சமி நாளான நேற்று மாலை முதல் இரவு வரை ஸ்ரீவராஹி தேவிக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி வழிபாடு செய்தார்கள்.
Samayam Tamil srivarahi devi special pooja
எதிரிகளை விரட்டும் ஸ்ரீவராஹி தேவிக்கு பூஜை!

மொத்தம் உள்ள ஏழு பேரில், ஐந்தாவது நிலையில் இருப்பவள்.ஸ்ரீவராஹி தேவி. ஆகவே, பஞ்சமி அன்னை என்பார்கள். அதாவது பஞ்சங்களைப் போற்றுபவள் என்று அர்த்தம்!
பண்டாசுர வதத்தின் போது, அன்னை லலிதையால் அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் சப்தகன்னியர்! ப்ராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி! இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவளாகத் திகழ்கிறாள் வராஹி. மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். கோபம் என்றால் கடும் உக்கிரமும் அன்பென்றால் கருணை ததும்புபவளாகவும் இருப்பவள்! லலிதாம்பாளின் படைத்தலைவி இவள். சேனாதிபதியாகப் போர் செய்தவள்! இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதம் என்கிறது புராணம்!
ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி என பல வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் என்று பல உடைகள், பல ஆயுதங்களுடன் திகழ்பவர்கள்! பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள் ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள்.
சிவாலயங்களில், சப்தகன்னியர் சந்நிதி இருக்கும். அதில் வராஹியும் தரிசனம் தருகிறாள். குறிப்பாக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அற்புதமாகாக் காட்சி தருகிறாள். தஞ்சை பெரியகோயிலில் தனிச்சந்நிதியில் தரிசனம் தருகிறாள்!
வராஹரின் சக்தி என்றும், எமனின் சக்தி என்றும் சொல்லப்படுகிறாள் ஸ்ரீவராஹி. வராஹம் என்றால் பன்றி. வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது, அவருக்கு உதவியவள் இந்த வராஹி. பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும். ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு, தன் மூக்கின் நுனியில், அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி வைக்க வேண்டும் அப்படி பூமியை மூக்கு நுனியில் வைப்பதற்கு உதவியவள்தான் வராஹி தேவி!
வாழ்வில், பள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அன்பர்களை கரையேற்றி, உயர்த்திவிடுப்வள் ஸ்ரீவராஹி தேவி! இவளை பஞ்சமி நாளில், வணங்கி வழிபடுவது சிறப்பு. எனவே நேற்று மாலையில் அவளுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டார்கள் பக்தர்கள்.
மாலையில் துவங்கி இரவு நடை சார்த்தப்படும் வரை ஸ்ரீவராஹி தேவிக்கு அர்ச்சனைகளும் வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெற்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்