ஆப்நகரம்

சைதை பெருமாள் கோயிலில் சுக்கிர வழிபாடு பூஜைகள்

சென்னை மேற்கு சைதாபேட்டையில் உள்ளது ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில். வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

TOI Contributor 10 Jun 2016, 3:17 pm
சென்னை மேற்கு சைதாபேட்டையில் உள்ளது ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில். வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
Samayam Tamil sukkara vazhipaadu pooja for sri prasanna venkata narasimha perumal
சைதை பெருமாள் கோயிலில் சுக்கிர வழிபாடு பூஜைகள்


சுக்கிர வழிபாடு எனும் வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை திறந்தது முதல் இரவு நடை சார்த்தப்படுவது வரை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு பெருமாளையும் தாயாரையும் தரிசித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்!

விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட திருத்தலம் இது. ஒருகாலத்தில், இங்கே ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் சகிதமாக ஸ்ரீராமர் சந்நிதி கொண்டு அருள்பாலித்து வந்தார்.

அப்போது, அனுமன் சந்நிதி மட்டும் இல்லாமல் இருந்தது. கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள அனுமனை வணங்கி வந்தனர் பக்தர்கள். பிறகு ஆலயத்தில் அனுமனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டது.

சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு, கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற போது, பள்ளம் தோண்டினார்கள். அப்போது பூமியில் இருந்து தாயாரின் விக்கிரகம் வெளிப்பட்டது. அடுத்து, பெருமாளுக்கும் விக்கிரகம் அமைத்து பிரதிஷ்டை செய்தார்கள்.

பெருமாளுக்கும் ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிங்கப் பெருமாள் என திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினர். தாயார் & ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயார்.

இங்கு ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ அர்ச்சனைகள் நடைபெறும். அப்போது ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசிமாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும். தடைபட்ட திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு சிறப்பு அர்ச்சனைகளும் பூஜைகளும் செய்யப்படுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்