ஆப்நகரம்

New Year 2019 Wishes: மலர போகும் 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!

சாதி, மதம், நாடு என அனைத்தையும் களைந்து அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒரே நிகழ்வு, புத்தாண்டுதான்.

Samayam Tamil 1 Jan 2019, 12:19 am
சாதி, மதம், நாடு என அனைத்தையும் களைந்து அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒரே நிகழ்வு, புத்தாண்டுதான். அந்த வகையில் 2019-ம் ஆண்டை உங்கள் உற்றார் உறவினர்களுடன் வரவேற்க புத்தாண்டு வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்.
Samayam Tamil New Year 2019 Wishes: பூக்க போகும் 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!
New Year 2019 Wishes: பூக்க போகும் 2019 புத்தாண்டு வாழ்த்துகள்!


பூத்தாடும் புத்தாண்டே வருக

கண்ட கனவுகள் கண்முன்னே கூடிவர
எண்ணம் சிறக்க இன்பம் பெருக
வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர
மண்ணும் செழிக்க வருவாய் புத்தாண்டே!



சிறு மிட்டாயொன்றை
சிரிப்போடு பறித்திட
குட்டி கைநீட்டி
குறு குறுவென
காத்திருக்கும் ஒரு
குழுந்தையையை போல
மனசு காத்திருக்கிறது
மலரும் புத்தாண்டிற்கு!!


இளமை பொங்கி இனிமை ஓங்கிட
வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட
தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட
வளமும் பெருகிட வருவாய் புத்தாண்டே!


மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!
இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!


செல்வம் பெருகி வருமை தீர
இல்லாமை என்ற நிலையும் மறைய
நல்வினை புரிந்து நன்மை பெற்றிட
வல்லமை தந்திட வருவாய் புத்தாண்டே!


வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!

வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்கலமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!

மங்களம் பொங்கி வாழ்வு வளம்பெற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்