ஆப்நகரம்

ஆடி அமாவாசை 2020, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் எப்போது? : ஆடி மாத சிறப்புகள் என்ன?

இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆடி மாதம் எப்போது வருகிறது. இந்த மாதத்தில் வரக்கூடிய அற்புத விரத தினங்களான ஆடி அமாவாசை 2020, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் எந்த தேதிகளில் வருகின்றது. அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்...

Samayam Tamil 13 Jul 2020, 7:12 pm
ஆடி மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். ஆடி மாதம் முழுவதும் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் என பெரிய விசேஷங்கள் வருவதோடு, ஆடி மாதத்தில் கிரமங்களில் இருக்கும் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
Samayam Tamil Aadi month Significance
Aadi month Significance


ஆடி பட்டம் தேடி விதை என பழமொழி உண்டு. அதன் படி ஆடி மாதம் நெற்பயிர் விதைக்க மிகவும் ஏற்ற மாதமாகும். இந்த ஆடி மாதம் ஜூலை 16ம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்குகிறது.
அதே போல் அம்பாளுக்குரிய விசேஷ தினமாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?: தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் ஆண்டாள் ஜெயந்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடிப்பூரம் ஆடி 9 / ஜூலை 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, அவர்களை நினைத்து விரதமிருந்து வணங்குவதற்கான மிக உகந்த நாள். இந்த நாளில் கடல், ஆறு, குளம் என நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆடி அமாவாசை எனும் அற்புத நாள் ஜூலை 20ம் தேதியும், ஆடி 5ம் தேதியான திங்கட்கிழமை வருகிறது.

ஆடி மாதத்தை சிறப்பாக பார்க்க அதன் பின் உள்ள ஆன்மிக அறிவியல் என்ன தெரியுமா?

வரலட்சுமி விரதம்
மகாலட்சுமியின் அருளை முழுமையாக கிடைக்கவும். கட்டிய கணவர் நீண்ட ஆயுளோடு வாழ ஒவ்வொரு திருமணமான பெண்ணும் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். அதே போல் நல்ல கணவர் அமைய வேண்டும் என திருமண வயதில் இருக்கும் கன்னிப்பெண்கள் விரதமிருப்பது வழக்கம்.
இந்த மங்களத்தை அருளக்கூடிய வரலட்சுமி ஜூலை 31ம் தேதி அதாவது ஆடி 16ம் தேதி வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரைப் பிரித்து வைப்பது வழக்கமாக உள்ளது. இது வெறும் சம்பிரதாயம் மட்டும் இல்லை. அதன் பின் மறைந்திருக்கும் அறிவியல், ஆன்மிக உண்மை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்? அறிவியலும், ஆன்மிகமும்...

ஆடி மாதம் இறைவனை வணங்குவதற்கான மாதம் என்பதாலும், ஆடி மாதம் ஒரு பெண் கருவுற்றால் கோடை வெயில் சுட்டெரிக்கக்கூடிய சித்திரை மாதத்தில் பிறக்கும் என்பதால் தம்பதியரை நம் முன்னோர்கள் பிரித்து வைத்தனர்.

குறிப்பு: கோயிலுக்கு சென்று விசேஷமாக கொண்டாடப்படும் பல திருவிழாக்கள், விரத நாட்கள் ஆடி மாதத்தில் வருகின்றனர். இருப்பினும் கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் வீட்டிலேயே நாம் இறைவனை வணங்கி அருளைப் பெறுவது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்