ஆப்நகரம்

Dasara Wishes: தசரா வாழ்த்து செய்திகள்: நம் அகந்தையை அழிக்கும் தசரா வழிபாடு...

பெரும் சிவ பக்தான இருந்தாலும், அடுத்தவரின் மனைவி மீது ஆசை பட்டு, தான் என்ற அகந்தை கொண்ட பத்து தலை இராவணனை ராமபிரான் அழித்ததைப் போல இந்த தசராவின் இறைவனை வழிபட்டு நம் அகந்தையை அழித்து வாழ்வின் வெற்றி அடைவோம்...

Samayam Tamil 8 Oct 2019, 7:31 am
ராம அவதாரத்தின் முக்கிய அம்சமான இராவண வதம் நட்சந்த தினத்தை தசரா நாளாக கொண்டாடப்படுகின்றது.
Samayam Tamil Dussehra


தமிழகத்தில் மகிசாசூரனை வதம் செய்த திருநாளை விஜய தசமி தினமாக கொண்டாடப்படும், அதே நாளில், வட இந்தியாவில் ராமன் இராவணனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக தசரா தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தை ராம்லீலா என்ற விழாவாக பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய அம்சமாக பத்து தலை கொண்ட ராவனனை ராமன் தனது அம்பால் வீழ்த்துவது போன்று, பெருந்திரளான மக்கள் ஒரு மைதானத்தில் கூடி, அங்கு 10 தலை கொண்ட ராவண உருவத்தில் வண்ண பட்டாசுகளால் சுற்றி, அதை ராமர் வேடம் அணிந்த ஒருவரால் எரியூட்டப்படுவது வழக்கம்.

மைசூரில் இந்த தசரா தினத்தின் போது அலங்கரிக்கப்பட்ட யானை மீது மைசூர் ராஜ பரம்பரையை சேர்ந்த மன்னர் ஊர்வழமாக வருவர். அதோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடப்பது வழக்கம்.

தற்போது மன்னராட்சி முடிந்த பின்னரும், இந்த வழக்கம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்